வெள்ளத்தில் வந்த முதலை: வாலிபரை கொன்றது
Subscribe to Oneindia Tamil
சீர்காழி:
சீர்காழி அருகே வெள்ளத்தில் சிக்கிய வாலிபரை முதலை இழுத்து சென்றது. ஒரு கை, காலின்றி அவர் பிணமாகமீட்கப்பட்டார்.
சீர்காழி தாலுகாவில் உள்ள முதலைமேடு கிராமம். கொள்ளிடம் ஆற்றில் சில தினங்களுக்கு முன் வெள்ளப் பெருக்குஏற்பட்ட போது முதலை மேடு கிராமத்தை சூழ்ந்தது. அங்கிருந்தவர்களை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும்படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருந்தனர்.இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த அய்யா என்பவரின் மகன் சுப்பிரமணியனை (வயது 25) மட்டும்காணவில்லை. இவர் கட்டிட தொழிலாளி என்பதால் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என்று பெற்றோர்நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதலை மேடு திட்டு அருகே ஒரு புதரில் சுப்பிரமணியன் பிணம் ஒரு பக்க கையும்,காலுமின்றி அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் முதலை கடித்ததற்கான அடையாளங்கள்காணப்பட்டன.
முதலை மேடு பகுதியில் முதலைகள் அதிகம் உலவுவதால், சுப்பிரமணியன் வெள்ளம் சூழ்ந்த சமயத்தில் ஆற்றைநீந்தி கடக்கும் போது முதலையிடம் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications