நாடு முழுவதும் இனி லோக்கல் கால்: இன்டர்நெட் தொலைபேசிக்கும் அனுமதி
டெல்லி:
இந்தியா முழுவதும் எஸ்.டி.டி கட்டணம் பல மடங்கு குறைக்கப்படுகிறது. அதே போல முறையாக இன்டெர்நெட்தொலைபேசி சேவைக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியா முழுவதும் லோக்கல் கால் கட்டணத்தில் தொலைபேசியில் பேசலாம்.
உள்நாட்டு நீண்ட தூரத் தொலைபேசி(எஸ்டிடி), வெளி நாடுகளுக்கான தொலைபேசி சேவை வழங்கும் தொலைத்தொடர்பு (ஐஎஸ்டி) நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் மற்றும் வருடாந்திர உரிமக் கட்டணம் பல மடங்குகுறைக்கப்படுகிறது.
இதன் மூலம் அந்த நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் பலன்களை, சந்தாதாரர்களுக்கு வழங்கும். இதனால்எஸ்டிடி கட்டணம் லோக்கல் கால் கட்டணத்துக்கு இணையாகக் குறைந்துவிடும்.
அதே போல் முதல் முறையாக இந்தியாவில் இன்டெர்நெட் தொலைபேசி சேவைக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
எஸ்.டி.டி. மற்றும் ஐ.எஸ்.டி. சேவையில் மேலும் பல நிறுவனங்களை ஈர்க்க வசதியாக, தொலைபேசிநிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 100 கோடியில் இருந்து ரூ. 2.5 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வருடாந்திர உரிமக் கட்டணம் ஆண்டு மொத்த வருவாயில் 15 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது. எஸ்.டி.டி. சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச முதலீட்டு அளவும் ரூ. 2.5கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.டி. சேவை வழங்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 25 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வருடாந்திர உரிமக் கட்டணம் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாககுறைக்கப்படுகிறது.
தோலைபேசித் துறையில் புதிதாக நுழையும் நிறுவனங்களுக்கு அத்துறையில் முன் அனுபவம் தேவை என்றகட்டுப்பாடும் நீக்கப்படுகிறது.
தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி இன்டெர்நெட் தொலைபேசி சேவையையும் வழங்கலாம்.கம்ப்யூட்டரில் இருந்து தொலைபேசிக்குப் பேசும் இந்த சேவையை இந்தியாவில் முதல் முறையாகஅனுமதிக்கப்படுகிறது.
இந்த சலுகைகள் அனைத்தும் வருகிற ஜனவரி முதல் அமலுக்கு வரும். தொலைபேசி சேவை வழங்கும்நிறுவனங்களுக்கு 9 சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒன்று என்ற எனது இலக்கை அடைவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஜனவரி முதல் இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் (லோக்கல் கால்) தொலைபேசியில் பேசும் வசதியைபொதுமக்கள் பெற முடியும் என்றார் மாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications