தமிழக வெள்ள சேதம்: மத்தியக் குழு வருகை
சென்னை:
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது. பாதிக்கப்பட்டபகுதிகளில் அந்த குழுவினர் 3 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பலத்த மழை பெய்தது.இந்த மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் புகுந்து பலர்பாதிக்கப்பட்டனர்.அதே போல காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரையோர மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகைஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன.
வெள்ளத் சேதத்திற்கு நிவாரணமாக மத்திய அரசு ரூ. 1,120 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர்ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந் நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சக இணைசெயலாளர் டி.எஸ். மிஸ்ரா தலைமையில் ஒரு உயர்மட்ட குழு தமிழகம் வருகிறது.
இந்த குழுவில் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளும் இடம் பெற்றுள்ேளனர். வரும் 17ம்தேதி தமிழகம் வரும் இக் குழு 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளச் சேதங்களைபார்வையிடும்.
இக் குழு ஜெயலலிதாவையும் சந்தித்து பேசுகிறது. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் என். நாராயணன்,பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிப்புத்துறை சிறப்பு ஆணையர் ஆர்.சந்தானம், நிதித்துறை செயலாளர்கே.ஞானதேசிகன், வருவாய்த்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைநடத்துகிறார்கள்.
பிறகு மத்திய குழுவினர் 3 அல்லது 4 குழுக்களாக பிரிந்து சென்னை உள்பட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகின்றனர்.
அதன் பிறகு அவர்கள் தங்களின் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வார்கள். அதன்படி மத்திய அரசுதமிழகத்துக்கு நிதியுதவி வழங்கும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications