தமிழகம்: 2007ல் 2,00,000 அரசு ஊழியர்கள் ஓய்வு
சென்னை:
தமிழ்நாட்டில் 2007ம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஆசிரியர்களின்எண்ணிக்கை மட்டும் 4 லட்சம் ஆகும். அரசு ஊழியர்களில் 3.86 லட்சம் பேர் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாகபணியாற்றி வருகிறார்கள்.சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தொகுப்பு ஊதியம் பெற்று வருகிறார்கள். தொகுப்பூதியம் பெறுவர்களுக்கு நிரந்தரப்பணியாளர்களைப் போல அனைத்து பயன்களும் கிடைப்பதில்லை.
அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கல்வித்துறை, சுகாதாரத்துறைகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அரசுஊழியர்களில் ஆண்டுதோறும் சராசரியாக 45,000 முதல் 65,000 பேர் வரை ஓய்வு பெறுகின்றனர்.
ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இந்த நிலையில் 2007ம் ஆண்டில் மட்டும் 2லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளார்கள். இந்த ஊழியர்கள் அனைவரும் 1970, 1972ம் ஆண்டு அரசுப் பணிகளில்சேர்ந்து சுமார் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
அரசு துறைகளில் யாரையும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 2001, நவம்பர் மாதம் வேலை நியமனத் தடை சட்டம்கொண்டு வந்தது. இந்த சட்டம் தற்போது அமலில் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகனில் புதிதாக அரசு வேலைக்கு ஆட்கள்சேர்க்கப்படவில்லை.
ஆனால் பணி நியமனத் தடை சட்டத்தில் இருந்து கல்வி, மருத்துவம், போலீஸ் ஆகிய துறைகளுக்கு மட்டும் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2007ம் ஆண்டு 2 லட்சத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். ஏற்கனவே உள்ள 1 லட்சம்காலி பணி இடங்களையும் சேர்த்தால் 3 லட்சத்தையும் வருகிற ஆண்டில் தாண்டிவிடும்.
அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதை தமிழக அரசு தொடர்ந்து நிறுத்தி வைத்தால், 2007ம் ஆண்டுக்குப் பின் அரசுப்பணிகளில் பெரும் தாமதமும், சில பணிகள் ஸ்தம்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications