நக்ஸல்: ஊத்தங்கரை ஸ்டேசனுக்கு பாதுகாப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தை நக்ஸலைட்டுகள் தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக காவல்நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த ஏராளமான போலீசார் நவீன துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்தைச் சுற்றிநிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் காவல் நிலையத்தின் மீது வாகனத்தில் குண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்து மோதலாம் என்பதால் போலீஸ் ஸ்டேசனின்வாயில் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவின் மக்கள் யுத்தக் குழுவினரிடம் பயிற்சி பெற்ற சிவா என்ற பார்த்திபனை 3 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 24ம் தேதிபோலீசார் ஊத்தங்கரை அருகே வைத்து சுட்டுக் கொன்றனர்.
இதைத்து அதே தேதியில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு இந்தப் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மேலும் பிகாரில் சில நாட்களுக்கு முன் சிறைச்சாலை மீது மிக சாகசமாக நக்ஸல்கள் நடத்திய தாக்குதலும் இந்த அதிகபட்சபாதுகாப்புக்குக் காரணம் என்று தெரிகிறது.இது தவிர தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மலைக் காடுகளை ஒட்டிய பகுதிகளிலும் சுமார் 200 இடங்களில் கண்காணிப்பும்போடப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட சிவாவுக்கு அஞ்சலி செலுத்த ஊத்தங்கரைக்கு நக்ஸல்கள் வருவார்கள் எனக் கருதும்போலீசார் அவர்களைப் பிடிக்கவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications