விபாச்சார பெண்கள், கொள்ளையர்கள் கூட்டணி: 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் விபசார அழகிகளிடம் பணக்காரர்களை வரவைத்து அவர்களிடம் கொள்ளையடித்து வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
விபச்சார அழகிகள், புரோக்கர்கள், கொள்ளையர்கள் என்ற கூட்டணி அமைத்து இந்த வேலை நடந்து வந்தது.உல்லாசத்துக்காகப் போய் இவர்களிடம் மாட்டி பணம் இழந்த பலரும் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து உதவிகமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர் நடத்திய விசாரணையில் கொள்ளையர்களுடன் தொடர்புடைய 3 விபசார புரோக்கர்கள் பிடிபட்டனர். அவர்களைதுருப்பாகப் பயன்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
கோயம்பேடு பகுதியில் அடுக்குமாடி வீட்டில் ஹைதராபாத் பெண்ணிடம் ஜாலியாக இருக்க ஒரு தொழிலதிபர் வருவதாகவும்அவரை மடக்கினால் பல லட்சம் கிடைக்கும் என்றும் புரோக்கர் மூலம் போலீசார் கொள்ளையர்களுக்கு தகவல் அனுப்பினர்.
இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்த 4 கொள்ளையர்களையும் போலீஸ் தனிப்படை சுற்றி வளைத்துப் பிடித்தது.அவர்கள் பெயர் விவரம்: கார்த்திக் (வயது 30), ராஜா (வயது 23), முருகன் (வயது 26) மோகன் பிரகாஷ் (வயது 32).
இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தது கருப்பு பாலு என்று தெரிய வந்துள்ளது. இவன் 2001ம் ஆண்டு அம்பத்தூர்ஆயில் மில் அதிபரை கடத்திய வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டான். அதன் பின்னர் தலைமறைவாகி விட்டான்.
இவனுக்கு அம்பத்தூர், ஆவடி பகுதியில் 2 தனி பங்களாக்கள் சொந்தமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
சினிமா சான்ஸ் தேடி சென்னை வரும் இளம் பெண்களை புரோக்கர்கள் மூலம் பிடித்து அறையில் அடைத்து வைத்து மயக்க ஊசிபோட்டு கற்பழித்த பின்னர் பணம் நகையை பறித்துக் கொண்டு துரத்தி விடுவது பாலு கும்பலின் வழக்கமாகும்.
இவர்களின் பிடியில் சிக்கியவர் பட்டியலில் பல முக்கிய புள்ளிகள், பெண்கள், சினிமா துணை நடிகைகள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் என்று ஏராளமான பேர் உள்ளனர். ஆனால், உல்லாசமாக இருக்கச் சென்றும், உல்லாசம் கொடுக்கச் சென்றும்இவர்களிடம் மாட்டியவர்கள் என்பதால் அந்த ஆண்களும், பெண்களும் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள கருப்பு பாலு தான் சங்கரராமன் கொலையில் போலி குற்றவாளிகளைத் தயார் செய்து தந்து அப்புவுக்குஉதவியவன் என்றும் தெரிய வந்துள்ளது. அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாலு தனக்கு கிடைத்த பணத்தில் பாகுபாடு இல்லாமல் போலீசாருக்கு ஒரு தொகையை கொடுத்து வந்துள்ளான். இதனால்அவனுக்கு விசுவாசமாக பல போலீசார் இருந்ததும் இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications