சுஹாசினி மீது தமிழறிஞர் உள்பட 7 பேர் வழக்கு
சென்னை:
நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சுஹாசினிக்கு எதிராக தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள்குவிகின்றன.இந்த நிலையில் சென்னையில் தமிழறிஞர் ஒருவர் சுஹாசினி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுஹாசினிக்கு எதிராக புயல் போல கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஈரோடு, வாலாஜபேட்டை, கரூர், திருச்சி ஆகியநீதிமன்றங்களில் சுஹாசினி மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதுவரை 5 வழக்குகள் அவர் மீது தாக்கலாகி உள்ளது.ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் ஈரோடு ஜூடிசியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்சுஹாசினி டிசம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராகும் படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6வது வழக்காக சுஹாசினி மீது சென்னை எழும்பூர் 5வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்அரும்பாக்கம் வினாயகபுரத்தை சேர்ந்த சின்னப்ப தமிழர் என்ற தமிழ் அறிஞர் போட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் அருள்ராஜ் முன்னிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன், கணேசமூர்த்தி ஆகியோர் இது தொடர்பான மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனுவில் சின்னப்ப தமிழர் கூறியிருப்பதாவது:
நான் தமிழ் பண்பாட்டில் அக்கறை உள்ளவன். திருமணத்துக்கு முன்பு பெண்கள் செக்ஸ் உறவு வைத்து கொள்வது குறித்து குஷ்புதெரிவித்த கருத்து எனது மனதை பாதித்துவிட்டது.
குஷ்புக்கு ஆதரவு தெரிவித்து சுஹாசினி கருத்து வெளியிட்டிருக்கிறார். தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்றுசுஹாசினி கேட்டிருக்கிறார்.
இதன் மூலம் தமிழ் மக்களை மற்ற மொழி இனத்தவர்கள் ஏளனமாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுஹாசினி வேண்டுமென்றேகலவரத்தை தூண்டும் நோக்கத்தோடு இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் இழிவுபடுத்தி உள்ளார். எனவே அவர் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ்தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகிற விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு தள்ளி வைத்துஉத்தரவிட்டார்.
இந்த நிலையில் நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாவேந்தர் இலக்கிய பேரவையைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சுஹாசினிமீது வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications