திமுக கூட்டணிக்கு வேட்டு: திண்டிவனம் முயற்சி
சேலம்:
தமிழக காங்கிரஸ் கட்சியில் மீண்டும் கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாக திண்டிவனம் ராமமூர்த்தி குரல்தர ஆரம்பித்துள்ளார்.
வாயும் வயிறும் போல மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை காங்கிரசும் கோஷ்டிகளும். மாநிலத் தலைவராக உள்ளவரைபதவியில் இருந்து நீக்க எல்லா எதிர் கோஷ்டிகளும் கைகோர்த்து செயல்படும்.அவர்களில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர் தலைவாகிவிட்டால், நீக்கப்பட்ட தலைவரின் கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு பிறகோஷ்டிகள், புதிய தலைவருக்கு எதிராக அணி திரளும். இந்தக் கதை ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.
இப்போதைய தலைவர் வாசனுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்பட்ட இளங்கோவனை மத்திய அமைச்சராக்கிஅமைதிப்படுத்தியது காங்கிரஸ் தலைமை. இதனால் வாசனுக்கு எதிராக கோஷ்டிகள் தலையில்லாமல் தவித்தன.
இந் நிலையில் அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார் மாஜி எம்பியான திண்டிவனம் ராமமூர்த்தி. காங்கிரசில் வன்னியர்கள்ஒதுக்கப்படுகிறார்கள் என்று தேசியக் கட்சியிலேயே ஜாதிப் பூசலுக்கு அடி போட்டார் திண்டிவனம்.
ஆனால், அவருக்கு வன்னியரல்லாத தலைவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சியைஏற்கும் திராவிடக் கட்சியோடு தான் காங்கிரஸ் கூட்டணி சேர வேண்டும் என்று புது முழக்கம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
கூட்டணி ஆட்சியை ஏற்க திமுக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் திண்டிவனத்தின் கோஷம், காங்கிரஸ்-திமுககூட்டணிக்கு வேட்டு வைக்கும் முயற்சிகளின் ஆரம்பமாகவே தெரிகிறது. காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகஅரசை வெகுவாகப் பாராட்டினார்.
சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய திண்டிவனம்,
திமுக தலைமையிலான கூட்டணியை திண்டிவனம் ராமமூர்த்தி திட்டம் போடுவதாகக் கூறி தப்பிக்கப் பார்க்கிறது ஒரு கூட்டம்(வாசன் கோஷ்டி). தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு கோடாபாடு உண்டு.
ஆனால் இன்று காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்கள் கூட அறிவாலயத்தில் தான் முடிவு செய்யப்படுகின்றன. அப்படியானால்சத்தியமூர்த்தி பவன் எதற்கு?
வெள்ளச் சேதத்தைப் பார்வையிட வந்த மத்தியக் குழு தமிழக அரசின் வெள்ள நிவாரணப் பணிகளை பாராட்டியுள்ளது.
காங்கிரஸ் யாருடைய குடும்பச் சொத்தும் அல்ல. வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வட மாவட்டங்களில் அதிகஇடங்கள் தரப்பட வேண்டும். தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சி அமையும் என்ற உறுதிமொழியை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications