முதுமலையில் யானைகள் முகாம் துவங்கியது
முதுமலை:
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.
ஜனவரி 7ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமில் கோயில் யானைகளும் மற்றும் தனியாருக்குச் சொந்தமான பயிற்சி பெற்றயானைகளும் பங்கேற்கின்றன.கடந்த இரு ஆண்டுகளாக முதுமலையில் நடக்கும் இந்த முகாமில் கடந்த ஆண்டு 64 யானைகள் பங்கேற்றன. இந்த ஆண்டு 63யானைகள் முகாமுக்கு வந்துள்ளன. இதில் 23 யானைகள் தனியாருக்குச் சொந்தமானவை.
தமிழகம் முழுவதும் இருந்து லாரிகள் மூலம் இந்த யானைகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்டன. பல இடங்களில்வழக்கம்போலவே யானைகளை லாரியில் ஏற்ற கோவில் நிர்வாகிகள் பெரும் பாடுபட்டனர். யானைகளை லாரியில் ஏற்றபாகன்கள் அவற்றை அடித்தும், உதைத்தும் கொடுமைப்படுத்தியது கடந்த ஆண்டுகளில் பெரும் விமர்சனத்துக்குள்ளானதுநினைவுகூறத்தக்கது.
இந்த முகாமுக்காக முதுமலை தெப்பக்காடு பகுதியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு திறந்த வெளியில்செடிகள், முட்கள் வெட்டப்பட்டு மணல் கொட்டப்பட்டு சமமாக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் யானை இறங்கிக் குளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சுமார் 6 வார காலம் இங்கு தங்கப் போகும் யானைகளுக்கு கருப்பு, மண்டை வெல்லம், தென்னை ஓலைகள் உணவாகவழங்கப்படவுள்ளன. கால்நடை மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவில் யானைகளுக்கு முதுமலையிலும் தனியார் யானைகளுக்கு டாப்ஸ்லிப்பிலும் முகாம் நடக்கிறது.
இன்று காலை அமைச்சர்கள் வைத்தியலிங்கம், ராமசாமி, மில்லர் ஆகியோர் யானைகள் முகாமைத் தொடங்கி வைத்தனர்.யானைகளுக்கு மாலை அணிவித்தும், பட்டம் கட்டியும் மரியாதைகள் செய்யப்பட்டன.
இந்த விழாவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் யானையான ருக்குவும் பங்கேற்க இருந்தது. ஆனால், வரும்டிசம்பர் 13ம் தேதி அக் கோவிலில் நடக்கும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த யானை பங்கேற்க முடியாமல்போய்விடும் என்பதால் முகாமில் 13ம் தேதிக்குப் பின் தாமதமாகக் கலந்து கொள்ள இந்த யானைக்கு தமிழக அரசு அனுமதிதந்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக இந்த முகாமில் பங்கேற்றதால் கார்த்திகை விழாவை யானை இல்லாமல் நடத்தினர் கோவில்அதிகாரிகள். இது பக்தர்களின் விமர்சனத்துக்கு உள்ளானதால் இந்த ஆண்டு ருக்குவுக்கு ஸ்பெஷல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications