அமிர்தாஞ்சன் தொழிற்சாலையில் தீ விபத்து
திருப்போரூர்:
சென்னை அருகே ஏகாட்டூர் என்ற இடத்தில் உள்ள அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையில் இன்று தீ விபத்துஏற்பட்டது.
மெத்தனால் மற்றும் பல்வேறு மூலிகைகளில் இருந்து அமிர்தாஞ்சன் தைலம், தலைவலி மருந்துகள் இங்கு தான்தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் இன்று காலை 7.30 மணிக்குத் தீ விபத்து ஏற்பட்டது.அங்கிருந்த வேதிப் பொருட்களில் தீ வேகமாகப் பரவி மூன்று மாடிக் கட்டமே எரியத் தொடங்கியது. இதையடுத்து 5தீயணைப்புப் படை வண்டிகள் விரைந்து வந்தன.
ஆனால், தொழிற்சாலையின் வாயிலையும் தீ அடைத்துக் கொண்டதால் வண்டிகளால் உள்ளே நுழைய முடியவிலலை.இதையடுத்து வெளியில் இருந்தே தீயை அணைக்க முயற்சி நடந்தது.
ஆனால், தண்ணீர் பட்டவுடன் வேதிப் பொருட்கள் வேகமாக வெடித்துச் சிதறியபடி எரிந்தன. இதனால் தீ மேலும் பரவியது.இதைத் தொடர்ந்து வேதிப் பொருட்களை அணைக்கும் ரசாயனம் தூவப்பட்டு தீ ஒரு வழியாகக் கட்டுபாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
7.30க்கு ஆரம்பித்த தீ 11 மணிக்குத் தான் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications