வருகிறது மதக் கலவர தடுப்புச் சட்டம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதிகே.ஆர். நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மீண்டும் நாளை கூடும் கூட்டத் தொடரில் இதில் 40க்கும் மேற்பட்ட பிரச்சனைகளைக் கிளப்ப பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்முடிவு செய்துள்ளன.ஒரு மாத காலம் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் மதக் கலவர தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.இச்சட்டத்தின் படி மதக் கலவரத்தின் மீது ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் மதக் கலவரம் ஏற்படும் பகுதிகளில் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே மத்தியப் படைகளை அனுப்பவும் இந்தச்சட்டம் வகை செய்யும்.
இந்தச் சட்டத்துக்கு பாஜகவிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்று தெரிகிறது.
அது தவிர பிகாரில் சிறை மீது நக்ஸல்கள் நடத்திய தாக்குதல், சமையல் கேஸ் தட்டுப்பாடு, டெல்லு குண்டுவெடிப்பு,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனம் உள்பட அரசுக்கு எதிராக 40க்கும்மேற்பட்ட பிரச்சனைகளைக் கிளப்ப பாஜக கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே இந்தக் கூட்டத் தொடரை அமைதியாக நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்துத் தரப்பினரும் சுமூகமான கூட்டத் தொடர் நடத்தஉதவுவதாக உறுதியளித்தனர்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து பெரும் வெற்றியோடு நாடாளுமன்றக் கூட்டத்தைசந்திக்கிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாத காலம் இந்தக் கூட்டத் தொடர் நடந்தாலும் விடுமுறைகள் எல்லாம் போக 17 நாட்கள் தான் அவைகள் செயல்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications