நாடாளுமன்றத்தில் பெரும் அமளி: ஒத்திவைப்பு
டெல்லி:
இராக் எண்ணெய் விற்பனை ஊழல் விவகாரத்தில் காங்கிரசுக்குத் தொடர்புள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்தில் பாஜக இன்றுபெரும் அமளியில் ஈடுபட்டது. இதையடுத்து ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தையடுத்து லோக்சபாவும் ராஜ்யசபாயும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த ஜனாதிபதி நாராயணனுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்ட பின் ஒத்தி வைக்கப்பட்ட அவை இன்று காலை கூடியதும் வோல்க்கர் கமிட்டி அறிக்கை பிரச்சனையை பாஜககிளப்பியது.இராக் எண்ணெய் விவகாரம் குறித்து பாஜக எம்பியான மல்ஹோத்ரா கொண்டு வந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்தின் மீது விவாதம்நடந்தது.
ஐ.நாவின் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் இராக்கின் பெட்ரோலிய குரூட் எண்ணெய் உலகம் முழுவதும் முறைகேடாகவிற்றகப்பட்ட விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கின் மகன் நடத்தும் நிறுவனம் தவிர காங்கிரஸ்கட்சிக்கும் தொடர்பு உள்ளதாக பாஜக எம்பிக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த எண்ணெய் விற்பனை மூலம் லாபமடைந்த நட்வர் சிங் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும். மேலும்இந்த ஊழலால் லாபடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசின் ஆலோசனைக் குழுத் தலைவர்பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக கோரியது.
சோனியா காந்தியன் பெயரை பாஜக எம்பிக்கள் குறிப்பிட்டவுடன் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்கள்ஒட்டுமொத்தமாக எழுந்து பாஜகவுக்கு எதிர்க் குரல் எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி நிலவியது.
இதையடுத்து அவையை 20 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி. ஆனால், மீண்டும் அவைகூடியதும் மீண்டும் பிரச்சனை உருவானது. இதையடுத்து இன்று முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதே போல ராஜ்யசபாவிலும் பாஜக எம்பியான ஜஸ்வந்த் சிங் இந்த விவகாரத்தை எழுப்பினார். இந்த விவகாரம் குறித்து சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதனால் அங்கும் பிரச்சனை வெடித்தது. இதையடுத்து ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில்,
வோல்க்கர் அறிக்கை மட்டுமல்ல, பிகார் சிறை உடைப்பு உள்பட எல்லா விஷயங்கள் குறித்தும் விவாதத்துக்கு அரசு தயாராகவேஉள்ளது. அதனால் தான் பாஜகவின் ஒத்திவைப்புத் தீர்மானம் ஏற்கப்பட்டது. ஆனால், அவர்கள் விவாதத்துக்குத் தயாராகஇல்லை. எதையாவது சொல்லி அவையில் குழப்பம் ஏற்படுத்திவிட்டு ஓடப் பார்க்கிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications