மீண்டும் ஒரு புயல்: தமிழகம் திக் திக்
சென்னை:
![]() |
| இன்று காலை 9 மணிக்கு இன்சாட் செயற்கைக் கோள் எடுத்துள்ள படம். இதில் இடது புறம் உள்ள மேகக் கூட்டம் தான் இத்தனைநாட்கள் தமிழகத்தை பாடாய் படுத்தியது. இப்போது வலப்புறத்தில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புயல் சின்னம்(வட்டத்துக்குள்) |
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு அருகில் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெயயும், என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வங்கக்கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அறிகுறிகள்அந்தமானுக்கு அருகே கடலில் உருவாகி உள்ளன.
![]() |
ஆனால் தாழ்வு மண்டலம் திசைமாறி மீண்டும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. தமிழகத்தில்அனைத்து இடங்களிலும் கடந்த 22, 23ம் தேதி இடைவிடாமல் மழை பெய்தது. மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள்,அணைகள் நிரம்பி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையத்தின்இயக்குனர் ரமணன் கூறியதாவது:
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அரபிக்கடல் பக்கமாக நகர்ந்துள்ளது. தற்போது அரபிக் கடலின் தென்கிழக்கே மையம்கொண்டுள்ளது. மேலும் இது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும். அநேக இடங்களில் கனமழை பெய்யும்வாய்ப்புள்ளது. மேலும் புதுவை, கேரளா மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று கூறினார்.
இந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அறிகுறிகள்அந்தமானுக்கு அருகே கடலில் உருவாகி உள்ளன.
![]() |
ஆனால், இந்த புயல் சின்னம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இதுவரை உறுதி செய்யவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்















Click it and Unblock the Notifications