வெள்ளம்: திருச்சி காவிரி கரையில் 5 கி.மீ. சுவர் கட்ட ஜெ உத்தரவு
திருச்சி:
திருச்சி காவிரிக் கரையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் 5 கி.மீ. தூரத்துக்கு நிரந்தர தடுப்புச்சுவர் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காவிரியில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் புகுந்து திருச்சி நகரமே சின்னாபின்னாவானது. இன்னும் கூட தாழ்வான பகுதிகளில்தொடர்ந்து நீர் தேங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளில் நீர் தேங்கியிருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டுவெளியேறி முகாம்களிலும், பாதுகாப்பான பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.திருச்சி நகரம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில் அங்கு சென்ற முதல்வர் ஜெயலலிதா செட்டித் தோப்பு பகுதியில்வெள்ள நிலையை பார்வையிட்டார். அங்கு காவிரிக் கரை உடைந்ததில் நகருக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
நகரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ. 26 கோடி தேவைப்படுவதாக முதல்வரிடம் திருச்சி மேயர் சாருபாலாகோரிக்கை விடுத்தார்.
செட்டித் தோப்பு பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்படாமல் தடுக்க அங்கு நிரந்தர சுவர் கட்ட வேண்டும் என முதல்வரிடம்முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் மனு கொடுத்தார். அதனை ஏற்ற ஜெயலலிதா அங்கு 5 கிமீ நீளத்துக்கு சுவர் கட்டப்படும் என்றுஅறிவித்தார்.
நேற்று முன் தினம் கடலூர் சென்ற ஜெயலலிதா, நேற்று திருச்சி, தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் வெள்ளச் சேதத்தை நேரிலும்ஹெலிகாப்டரிலும் பார்வையிட்டார். இன்று அவர் மதுரை, திண்டுக்கல் மாவட்டளைப் பார்வையிட்டார். ஏற்கனவேதிட்டமிட்டபடி அவரது சுற்றுப் பயணம் இன்றுடன் முடிந்திருக்க வேண்டும்.
ஆனால், நாளையும் அவர் தனது பயணத்தை நீடித்துள்ளார். நாளை அவர் திருவாரூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டத்தில்பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.


Click it and Unblock the Notifications
