சிறப்பு நிதி: தமிழக எம்பிக்கள் கோரிக்கை
டெல்லி:
தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின்கடன்களைத் திருப்பிச் செலுத்த காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்இன்று கோரிக்கை வைத்தனர்.
லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பின் இந்தப் பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி மோகன்கிளப்பினார். மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி போதாது என்று அவர் வாதிட்டார்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த ஓராண்டு காலகூடுதல் அவகாசம் தர வேண்டும் என்றார்.
திமுக எம்பி விஜயன் பேசுகையில், வெள்ளத்தின் பாதிப்பு யாரும் கனவு கூட காண முடியாத அளவுக்கு மிக மிக மோசமாகஉள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர். அவர்களுக்கு உடனடியான உதவிகள் தேவைப்படுகின்றனஎன்றார்.
காங்கிரஸ் எம்பி கார்வேந்தன் பேசுகையில், வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீடுகளைக் கட்டித் தர மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மதிமுக எம்பி எல்.கணேசன் பேசுயிைல், தமிழக்ததில் பெரும்பாலான முக்கிய பாலங்கள் சேதமடைந்துவிட்டன. பயிர்கள் மூழ்கிப்போய்விட்டன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த நிவாரண நிதியை யாரும் முறைகேடாகப் பயன்படுத்திவிடாமல் தடுக்க புதிய விதிகளையும் மத்திய அரசு வகுக்க வேண்டும்என்றார்.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், தமிழக வெள்ள நிலைமை மிகுந்த கவலை தருகிறது என்றார்.
அமைச்சர் டிஆர் பாலு பதிலளித்துப் பேசுகையில், தமிழத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய அரசு ஆய்விட்டு வருகிறது. உரியஉதவிகள் அனைத்தும் நிச்சயம் செய்யப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications