கொத்தடிமை: 21 தமிழக தொழிலாளர்கள் மீட்பு
சென்னை:
பெங்களூரில் அருகே ஒரு கல் குவாரியில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 21 தமிழர்களை உயர் நீதிமன்றஉத்தரவையடுத்து போலீசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட இவர்களுக்கு 3 மாதத்துக்குத் தேவையான உணவு, உடை, இருக்க இடம், நிதி உதவி ஆகியவற்றை அளிக்குமாறுசேலம் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், சேலம் மாவட்ட தாரமங்கலகத்தைச் சேர்ந்தவன் நான். எனது மனைவி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் கைக்குழந்தைகளுடன் கர்நாடகத்தில் ஒரு குவாரியில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
ஊதியமும் தராமல், இருக்க இடமும் தராமல் எங்களை அங்கு கொடுமைப்படுத்துகின்றனர். குவாரியைவிட்டு வெளியேஅனுப்பவும் உரிமையாளர்கள் மறுக்கின்றனர். 50 வயதான நான் அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டேன்.
அவர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சேகர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர், இவர்களை மீட்குமாறு சேலம் மாவட்ட போலீசாருக்குஉத்தரவிட்டனர். இதையடுத்து கர்நாடகம் விரைந்த போலீஸ் படை 21 பேரை குவாரிகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துசென்னை உயர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தியது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். கைக் குழந்தைகளுடன் இருந்தஇவர்களை மனிதாபிமானம் கூட இல்லாமல் நடத்தியுள்ளனர் குவாரி உரிமையாளர்களான வேணுகோபால் ரெட்டி, சீனிவாசரெட்டி ஆகியோர்.
மீட்கப்பட்ட 21 பேருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், நிதியுதவி வழங்க சேலம் மாவட்ட கலெக்டருக்குஉத்தரவிட்ட நீதிபதிகள், குவாரி உரிமாைளர்களான வேணு, சீனி ஆகிய இருவரும் டிசம்பர் 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
நேரில் ஆஜராகி, தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உதவிகள் செய்யப் போகிறார்கள், என்ன இழப்பீடு தரப்போகிறார்கள் என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். நேரில் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட்பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications