4ம் இடத்துக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி
கொல்கத்தா:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் 7வது இடத்தில் இருந்த இந்திய அணி இப்போது 4வதுஇடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தோடர் தர வரிசையில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கையுடனான ஒரு நாள்தொடரை வென்றது, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த ஒரு நாள் தொடரில் 2-2 என்று சமன் செய்தது ஆகியவற்றைத் தொடர்ந்துஇந்தியா, தர வரிசை பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இலங்கை, இங்கிலாந்து நாடுகள் ஒரே தர வரிசையில் இருந்தன. தற்போது இந்த இரு நாடுகளையும் முந்திய இந்தியா 4இடத்தைப் பிடித்துள்ளது.
2006 ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள இந்திய கிரிக்கெட் சாம்பியன் கோப்பைக்கு முதல் 6 இடங்களில் உள்ள நாடுகள்தான் தேர்வு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் தொடர் பேட்டிங் தர வரிசையில் இந்திய அணி கேப்டன் ராகுல் திராவிட் முதல் பத்து பேரில் 7வது இடத்தில் உள்ளார்.பந்து வீச்சாளர்களின் தர பட்டியலில் இர்பான் பதான் 8வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ தலைவரானார் சரத்பவார்:
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக மத்திய விவசாயத்துறை அமைச்சரும் மும்பையைசேர்ந்தவருமான சரத் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சரத்பவார் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து ஐக்மோகன் டால்மியா அணியின், 21 ஆண்டு கால கிரிக்கெட் வாரிய ஆட்சிமுடிவுக்கு வந்துள்ளது. உலகில் மிக அதிகமாகப் பணம் புரளும் விளையாட்டு அமைப்புகளில் மிகவும் முக்கியமானது இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இதற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் , முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.
நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் ரணவீர் சிங் மகேந்திராவை உள்ளடக்கிய டால்மியா கோஷ்டி ஓர் அணியாகவும், சரத்பவாரை உள்ளடக்கிய ஐ.எஸ் பிந்த்ரா கோஷ்டி மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் சரத்பவார் வெற்றி பெற்றார். அவர் 20-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்ட ரணவீர் சிங்மகேந்திராவை தோற்கடித்தார்.
இதை தொடர்ந்து புதிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரத்பவார் கூறியதாவது:
இம்முறை என் நம்பிக்கை வீண் போகவில்லை, எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நாடு முழுவதும் கிரிக்கெட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும். இளம் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.
கங்குலியை அணியில் சேர்த்துக் கொள்வது பற்றி தேர்வுக் குழுவுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும். அந்தமுடிவு அவருக்கு சாதகமாகவே இருக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications