தமிழகம் ரூ. 13,685 கோடி கோரிக்கை
சென்னை:
தமிழகத்துக்கு ரூ. 13,685 கோடி வெள்ளச் சேத நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக வெள்ளச் சேதத்தை இரண்டாவது முறையாகப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பின் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதம் வரலாறு காணாதது. ஒரே மாதத்தில் 3 முறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின்பெரும்பாலான பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்துவிட்டன.
உயிர்கள், பயிர்கள், உடமைகள், சாலைகள், பாலங்கள், ஏரிகள், குளங்கள், அணைகள் என அடிப்படைக் கட்டமைப்புகள் மிகமோசமாக இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இவற்றை முழுமையாக ஆய்வு செய்து சேதம் குறித்த இறுதி அறிக்கை மிகுந்த சிரமத்துக்கிடையே தயார் செய்யப்பட்டுள்ளது.அதன்படி வெள்ளச் சேதத்தால் ஏற்பட்ட பேரழிவை சீர் செய்ய தமிழகத்துக்கு ரூ. 13,685 கோடி தேவை.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க 2.58 லட்சம் டன் கூடுதல் அரிசியும், 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயும்தேவை.
வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகளைக் கட்டித்தர விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.அவர்களுக்கு தாற்காலிகக் குடியிருப்பு வசதியும் செய்யப்பட வேண்டும். இந்தத் திட்டத்துக்கு மட்டும் ரூ. 2,558.24 கோடிசெலவாகும்.
கடுமையான வெள்ளத்தால் தமிழகத்தில் 32,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துவிட்டன அவற்றை மீண்டும் அமைக்கவேண்டியுள்ளது. இந்தப் பணிக்கு ரூ. 2,523 கோடி தேவை.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications