ரயிலில் தூக்கில் தொங்கிய வாலிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குருவாயூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
நேற்றிரவு இந்த ரயிலை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில்கண்டுபிடிக்கப்பட்டார். நைலான் கயிற்றால் மின் விசியில் தூக்கு மாட்டி அவர் இறந்திருந்தார்.திருச்சி-சென்னை ரயில் டிக்கெட் ஒன்று அவரது பையில் இருந்தது. அவரது சட்டைக் காலரில் சபரி டெய்லர்ஸ், திருச்சி என்றஅடையாளம் உள்ளது. இதனால் அந்த வாலிபர் திருச்சியைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
அவர் இந்த ரயிலுக்கு எப்படி வந்தார், தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது அவரைக் கொன்று நின்றுகொண்டிருந்த இந்த ரயிலில் தூக்கில் மாட்டிவிட்டுச் சென்றார்களா என்று தெரியவில்லை.
இந் நிலையில் அவர் தூக்கில் தொங்கிய பெட்டி மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் இன்று காலை ரயில் குருவாயூர் புறப்பட்டுச்சென்றது. இறந்தபோன அந்த வாலிபருக்கு 30 வயது இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications