மீனாட்சி: கெடு முடிந்தது- சிபிஐ விசாரிக்கும்?
திருச்சி:
கரூர் மாவட்டம் குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்பது குறித்தும் இன்று தெரிந்துவிடும்.
குளித்தலையை சேர்ந்த ஜோதி ராமலிங்கத்தின் மனைவி ஆசிரியை மீனாட்சி கடந்த 2004ம் ஆண்டு முதல் காணவில்லை. இதுகுறித்து மீனாட்சியின் கணவர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் மேற்கொண்டவிசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதனால் மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், தனது மனைவியை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க போலீசாருக்குஉத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கை சிபிசிஐடியை விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படிசிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த வழக்கில் சிபிசிஐடியின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து இந்த வழக்கைவிசாரிக்கும் நீதிபதிகள், இதுவரை இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த சில அறிக்கைகள் சீல் இட்ட கவரில்வைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் சில அறிக்கைகள் போலீசாரிடமே திரும்ப தரப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
அவ்வாறு சிபிசிஐடியிடம் திரும்ப தரப்பட்டுள்ள அந்த அறிக்கைகளை நீதிமன்றம் படித்து பார்க்க வேண்டிய அவசியம் தற்போதுஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் டிசம்பர் 2ம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்யவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் மீனாட்சி வழக்கில் குற்றவாளிகளை சிபிசிஐடியினர் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பான விவரஅறிக்கைகளை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அறிக்கை ஏதும் போலீஸ் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்படாவிட்டால் இந்த வழக்கை நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றும்சூழ்நிலை உருவாகியுள்ளது.
மீனாட்சி காணாமல் போனதில் அதிமுக எல்ஏவும் மாஜி மந்திரியுமான பாப்பா சுந்தரம் மீதும் சந்தேகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications