மீனம்பாக்கம் விமான நிலைய ரன்வேயில் வெள்ளம்
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தின் ரன் வேயில் தண்ணீர் புகுந்ததால் விமானங்கள்பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டன.
கடும் மழையாலும், அருகாமை ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பாலும் மீனம்பாக்கம் பகுதியை நீர் சூழ்ந்தது. விமான நிலையத்தைஒட்டி ஓடும் கால்வாய்கள் நிரம்பி தண்ணீர் ரன் வேயில் புகுந்தது. இதனால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் மதுரையில் இருந்து சென்னை வந்த ஏர்-டெக்கான் விமானம் உள்ளிட்ட 3 விமானங்கள் பெங்களூருக்குத்திருப்பிவிடப்பட்டன.
அதே நேரத்தில் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டுவிமானங்கள் வழக்கம்போல் இயங்கின.
தப்பிய ஆவடி இருளில் மூழ்கியது:
இதற்கிடையே, ஆவடியைச் சுற்றியுள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரி மற்றும் அராபத் ஏரி ஆகியவை உடையாமல் தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அந்தப் பகுதி வெள்ளத்தில் இருந்து தப்பியுள்ளது.
கடந்த முறை கன மழை பெய்தபோது இந்த இரு ஏரிகளிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆவடிக்குள் புகுந்தது. இந் நிலையில்உடைப்பு ஏற்படும் எனக் கருதப்பட்ட பகுதிகள் மணல் கொட்டப்பட்டு இருக்கப்பட்டன. மேலும் தண்ணீர் கலங்கல் என்ற பகுதிவழியாகத் திருப்பி விடப்பட்டதால் இந்த முறை ஆவடி தப்பிவிட்டது.
ஆனாலும் மிக பலத்த மழையால் ஆவடியில் மின் கம்பங்கள் சரிந்ததாலும், டிரான்ஸ்பார்மர்கள் வெடித்ததாலும் ஆவடி மற்றும்முகப்பேர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. நேற்றிரவு இந்தப் பகுதியே இருளில் மூழ்கிக் கிடந்தது.
சரிந்த மின் கம்பங்கள் குறித்து அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால்சாலையில் ஏற்பட இருந்த உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications