எங்கெங்கும் வெள்ளம்: இருளில் மூழ்கிய சென்னை- மக்கள் பரிதவிப்பு
சென்னை:
![]() |
இடைவிடாது பெய்த மழையால் சென்னை நகரின் எல்லாப் பகுதிகளிலும் கரைபுரண்டு ஓடுகிறது வெள்ளம். பல பகுதிகளில்மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லட்சக்கணக்கானவர்கள் தண்ணீரில்தத்தளிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் தண்ணீர் வடிய பல நாட்களாகும் என்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் கொட்டிய மழை காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டனர்.
![]() |
கடந்த நான்கு நாட்களாகவே, சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்தபடி இருந்ததால், அரசுஇயந்திரங்கள் புயலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன.
சமீபத்தில் உருவான புயல் சின்னம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான நிலையிலும், நேற்று முன்தினம் காலை முதல்பலத்த மழை பெய்யத் துவங்கியது. நேற்று அதிகாலையில் இடி, மின்னலுடன் மழை பொழிந்ததால், புளியந்தோப்பு,மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, ஆதம்பாக்கம், பழைய பல்லாவரம், ஆலந்தூர், வேளச்சேரி, தாம்பரம் என்று சென்னைநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகின. ஒரே நாள் இரவில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழையால்சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள ஏரிகளும் உடைப்பெடுத்தன.
![]() |
ஏழுகிணறு, விருகம்பாக்கம், கிண்டி, எண்ணூர், வளசரவாக்கம் பகுதிகளில் வீட்டு சுவர் இடிந்து விழந்தன. கண்ணுக்கெட்டியதூரம் வரை மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதி கடல் போல் காட்சியளிக்கின்றன. ஏரிப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளைக்கட்டியவர்கள் அனைவரும் வெளியேற முடியாமல் அச்சத்துடன் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
வெள்ளத்தில் சிக்கிய சிலரை ராணுவ ஹெலிகாப்டர் மீட்டது. சென்னையில் மூன்று லட்சம் பேர் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.வெள்ளம் காரணமாக, சென்னையில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
![]() |
மெரீனாவில் கடல் சீற்றம் அதிகமாக இருந்த காரணத்தால் மீனவர்கள் யாரும் பல நாட்களாக மீன் பிடிக்கக் கடலுக்குள்செல்லவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜுரம், வாந்தி பேதி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம்உள்ளதால் அவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை நகர் முழுவதும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 10 குழுக்கள் மாத்திரை, மருந்துகளைபாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவுள்ளன
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?
















Click it and Unblock the Notifications