திருவள்ளூர், சேலம், தர்மபுரியிலும் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. இதில் 35 ஏரிகள் உடைந்தன.

தளி ஏரி, திருத்தணி ஏரி, நடுக்குன்றம் ஏரி, திருப்போரூர் ஏரி, தண்டலம் ஏரி உள்பட 70 ஏரிகள் உடைந்ததால் திருவள்ளூர்மாவட்டத்தில் எங்குபார்த்தாலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 75 நிவாரண முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். மேலும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள பிச்சாட்டூர் ஏரி உடைக்கப்பட்டதால் மக்கள் மீண்டும் வெள்ளத்தில்சிக்கியுள்ளனர். இந்த ஏரி ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் 25கி.மீ தொலையில் உள்ளது.

இந்த ஏரியின் சேஷம்பேடு என்ற ஊரிலுள்ள கரையை ஜேசிபி எந்திரம் மூலம் 10 மீட்டர் அகலத்துக்கு உடைத்து தண்ணீர்வெளியேற்றப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஆரணி ஆறு:

ஆரணி ஆற்றின் கரையோரம் இருந்து வீடுகள் மூழ்கின. குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்துகரையோர மக்களை போலீசார் எச்சரித்து வெளியேற்றினார்கள். இதற்கிடையே பிச்சாட்டூர் ஏரித் தண்ணீர் வரத்துஅதிகரித்ததாலும் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் அதிகரித்ததாலும் ஆரணி ஆற்றுவெள்ளம் ஊர்களுக்குள் புகுந்தது.

ஊத்துக்கோட்டை தாலுகா, பொன்னேரி தாலுகா, கும்மிடிப்பூண்டி தாலுகா ஆகிய 3 தாலுகாக்களிலும் உள்ள சுமார் 30கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக பாலவாக்கம், மங்கலம், காரணி, புதுப்பாளையம், பெருவாயல், புதுவாயல், ஏஎன்குப்பம், ஆரணி, ரெட்டிப்பாளையம், எளியம்பேடு, பெரும்பேடுகண்டிகை, பெரும்பேடு, மாதவரம், பெரவள்ளூர்,கம்மவர்பாளையம் ஆகிய கிராமங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு இதுவரை 14,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த சில கிராமங்களுக்குள் இன்னும் மீட்புக் குழுவினர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கோணம்:

திருவள்ளூரை அடுத்த ஜாகீர் மங்கலம் ஏரி உடைந்ததால் அரக்கோணம் பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் 3 அடி உயரத்துக்கு சென்றது.

புழல் மற்றும் பூண்டி ஏரி திறப்பால் அதை சுற்றியுள்ள பல கிராமங்கள் 4வது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.மணலி-பொன்னேரி நெடுஞ்சாலையில் தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மணலி புதுநகரும் வெள்ளத்தில் மிதக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் 80 சதவீத பகுதிகள் தண்ணீரில் மிதந்ததால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருக்கழுக்குன்றம்:

திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள பொன்பதிர் கூடம் ஏரி உடைந்ததால் பொன்பதிர்கூடம், பொன்விளைந்த களத்தூர் கிராமத்தைவெள்ளம் சூழ்ந்தது. வயல்களும் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்தது. தாழம்பேடு ஏரி உடைந்ததால் காஞ்சன் குப்பம்,சோகண்டி கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

சாலூர் ஏரி, பெரும்பேடு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. வழுதூர், காட்டூர், சீத்தேரி போன்றஏரிகள் உடைப்பினால் மதுராந்தகம் சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சிதம்பரம்:

சிதம்பரத்தில் காட்டுமன்னார் கோவில், சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் முழுமையாக பாதிப்படைந்தது.இடியுடன் கூடிய மழையினால் வீடுகளில் விரிசல்களும், வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்கள் கதவுகள் ஆடத் தொடங்கின.இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சேலம்:

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த மழையால் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள்மூழ்கின. பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. குமரகிரி ஏரி நிரம்பி வழிந்தோடியவெள்ளநீர் பச்சப்பட்டி பகுதியில் தேங்கி நிற்கிறது. திருமணி முத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் சுண்ணாம்புக் கார தெருபகுதி பாதிக்கப்பட்டது. எருமாபாளையம் ஏரியிலிருந்து பாய்ந்தோடிய வெள்ளநீர் களரம்பட்டி பகுதியிலும், வீராணம் ஏரி நீரால்வாய்க்கால் பட்டறை சீலாவரி பகுதியிலும் சேலத்தாம்பட்டி ஏரி நீர் சிவதாபுரம் பகுதியிலும் தேங்கி நிற்கிறது. ஒரு வாரமாகவடியாமல் நிற்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூக்கனேரி 4வது முறையாக நிரம்பியதில் திருமணி முத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆனந்தா பாலத்தின்மீது வெள்ள நீர் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளவாய்பட்டி ஏரி, அரியா கவுண்டம்பட்டி ஏரி,மாங்குப்பை ஏரிகள் நிரம்பி வழிந்த நீர் வயல்வெளிகளில் புகுந்து சேலத்தாம்பட்டி ஏரிக்கு வந்தது.

கழிவு நீர் புகுந்தது:

தளவாய்ப்பட்டியிலுள்ள பால் பண்ணை கழிவு நீர் மழை நீருடன் கலந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால்இங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்செங்கோடு:

திருமணி முத்தாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் புள்ளாக்கவுண்டம்பட்டி தரைப்பாலத்தில் வெள்ளம் ஓடியதால் பஸ்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது வெள்ளம் வந்தால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிகிறது. ஆற்றைசுற்றியுள்ள 20 குடிசைகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

ராசிபுரம்:

பலத்த மழையால் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பெரியயேரி நிரம்பி அருகில் உள்ள வயல்களில் வெள்ளம் புகுந்தது.இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ராசிபுரம் சேலம் ரோட்டில் உள்ள ஏரிக்கும், ஆத்தூர் மெயின் ரோட்டில் உள்ளகோனேரிப்பட்டி ஏரிக்கும் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. மேலும் மழை பெய்தால் இங்குள்ள குடிசைகள் தண்ணீரில் மூழ்கும்அபாயம் உள்ளது.

தர்மபுரி:

தர்மபுரியில் நிரம்பி கிடந்த ஏரி மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பஞ்சப்பள்ளி அணையிலிருந்துதிறந்துவிடப்பட்ட உபரிநீர் சின்னாற்றில் கரைபுரண்டு ஓடியது. இதனால் ராஜகுட்டை, பட கொண்டிப்பட்டி ஆள்மரம் பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியது.

தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வன்னியர் குளம், திப்பம்பட்டி இடையே காட்டாறு வெள்ளத்தால்தரைபாலத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் கடந்து சென்றது.இதனால் திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர்,சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். பாலக்கோடுஅருகே அத்திமுட்லு என்னுமிடத்தில் சின்னாறு குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள்அமைச்சரிடம் நிவாரண உதவி கேட்டு மனுக்கள் கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+