இன்னும் 1 லட்சம் பேர் தண்ணீரில் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தண்ணீர் இன்னும் வடியாத காரணத்தால் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் வசிக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டபொதுமக்கள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றனர்.

தொடர்ந்து பெய்த கன மழை, திறந்து விடப்பட்ட ஏரிகள் என பல முனை நீர்த் தாக்குதலுக்கு ஆளான சென்னை நகரின்கோட்டூர்புரம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் என பல்வேறுபகுதிகளில் தண்ணீர் வெள்ளம் என பாய்ந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து பெரும்பொருட் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது மழை விட்டும் கூட இந்தப் பகுதிகளில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. கடல் போலவீடுகளைச் சூழ்ந்து தீவுக் கூட்டங்களாக அவற்றை மாற்றியுள்ளது.

இங்கு வீடுகளுக்குள்ளும் இன்னும் தண்ணீர் வடியாமல் அப்படியே நிற்கிறது. இதனால் கீழ்த் தளங்களில் வசிப்போர் மேல்தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிலர் வீடுகளைக் காலி செய்து விட்டு வேறு இடங்களுக்குசென்று விட்டனர். பெரும்பாலானபொதுமக்கள் வீடுகளை தனியே விட்டு போக அஞ்சி (திருட்டுப் பயம் காரணமாக) தண்ணீரில் மிதந்தபடியே வசித்துவருகின்றனர்.

இங்குள்ள பல வீடுகளில் உணவுப் பொருட்கள், குடி நீர், பால் போன்ற அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம்நிலவுகிறது. இருப்பினும் வீடுகளை விட்டு வெளியேறாமல் தவித்து வருகின்றனர் மக்கள். துரைப்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்டஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்து இன்னும் வடியாமல் உள்ளது. 5000க்கும் மேற்பட்டோர் அங்கிருந்துஅப்புறப்படுத்தப்பட்டு நவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி நிவாரண குடிசைப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தோரும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய வீடுகளில் புகுந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. தொடர்ந்து தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.அங்குள்ளவர்களுக்கு படகுகள் மூலம் உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் படகுகள் மூலம்தான் அன்றாட வாழ்க்கை நடந்து வருகிறது. இதுதவிர வீடுகளில் பாம்புகள்,பூரான் போன்ற விஷ ஜந்துக்களும் புகுந்து மக்களின் நிம்மதியைக் கெடுக்கின்றன. இந்தப் பாம்புகள் பெரும்பாலும் தண்ணீர்பாம்புகள் என்றாலும் கூட கட்டு விரியன் போன்ற விஷப் பாம்புகளும் அவ்வப்போது தண்ணீரில் சகஜமாக மிதந்துசென்றவண்ணம் இருப்பதை இப்பகுதியில் பார்க்கலாம். இப்படி திரில்லான வாழ்க்கையில் வாழ்ந்து வரும் சென்னைப் புறநகர்ப்பகுதி மக்கள் தண்ணீர் எப்போது வடியும், தரைக்கு எப்போது வருவோம் என்று பரிதவிப்புடன் காத்துள்ளனர்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் டிசம்பர் 1ம் தேதி முதல் பெய்த மழையால் கடந்த 4 நாட்களில் மட்டும் 27 பேர்உயிரிழந்துள்ளனர். இதனால் மழைக்கு இதுவரை பலியாகியுள்ளோர் எண்ணிக்கை மொத்தம் 382 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+