வெள்ளத்தில் சுடுகாடு: இடமின்றி தவித்த பிணம்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு கிராமத்தில் சுடுகாடு வெள்ள நீரில் மிதந்ததால், மரணமடைந்த விவசாயியின் உடலைப்புதைக்க இடமில்லாமல் அவரது உறவினர்கள் பரிதவித்தனர்.
ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பெரும்பேடு கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ள நீர் திடீரென புகுந்ததைக்கண்டு பீதியடைந்த கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். அப்போது ஏழுமலை என்ற 56 வயது விவசாயிகீழே விழுந்து இறந்தார்.வெள்ள நீர் புகுந்த பீதியில் இருந்த கிராம மக்களுக்கு, ஏழுமலை இறந்தது பெரும் சோகத்தைக் கொடுத்தது. உறவினர்கள் கூடிவீட்டு முன்பு தேங்கியிருந்த இடுப்பளவு தண்ணீரில் நின்றபடியே ஏழுமலைக்கு இறுதி மரியாதைகள் செலுத்தினர்.
பின்னர் அவரது உடலை எரியூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததாலும், எங்கு பார்த்தாலும் நீராகஇருப்பதாலும், உடைலப் புதைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றனர். ஆனால்சுடுகாடே தெரியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து நின்றது.
இதனால் பிணத்தைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஏழுமலையின் உறவினர்கள் விழித்தனர்.அப்போது மேடான ஒரு பகுதியில் தண்ணீர் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பிணத்தைக் கொண்டு சென்றுபுதைத்து விட்டு பத்திரமான இடங்களுக்கு கிராமத்தினர் சென்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications