வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விஜயகாந்த் ஆறுதல்
சென்னை:
சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவருமானவிஜயகாந்த் சந்தித்து ஆறுதல் வழங்கி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு நடிகர் விஜயகாந்த், தேமுதிகஅவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் படகுகளில் சென்றனர். அங்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்துவிஜயகாந்த் ஆறுதல் கூறினார்.பின்னர் அவர்களுக்கு பால், பழம், காய்கறிகள், ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விஜயகாந்த் வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களும், 12 மத்திய அமைச்சர்களும் மத்தியஅரசிடம் வாதாடி, பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு அனைத்து உதவிகளையும் பெற்றுத் தர வேண்டும்.
இது அவர்களது கடமை, பொறுப்பு. மாநில அரசு விரைவான நடவடிக்கை மேற்கொண்டதால் பல உயிர் பாதிப்புகள்தவிர்க்கப்பட்டுள்ளன. அதேபோல, நிவாரண உதவிகளை வழங்குவதில் மத்திய அரசும் விரைந்து செயல்பட வேண்டும், மந்த கதிஇருக்கக் கூடாது.
சுனாமியால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இப்போது இந்த மழை வெள்ளத்தால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.மற்றபடி இரு சேதமுமே ஒன்றுதான், இதை தேசிய சீரழிவாக கருதி மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்என்றார் விஜயகாந்த். பாதிக்கப்பட்டோருக்கு 9000 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதாக தேமுதிகவினர்தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications