புதிய காதலர்களோடு சேர்ந்து பழைய காதலனை கொன்ற பெண்
சென்னை:
சென்னையில் கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ட 6பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள புணலூரைச் சேர்ந்தவர் செபாஸ்டியன். இவர் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பிரமுகராகவும், புணலூர் பஞ்சாயத்துத் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் சென்னைக்கு வந்தார் செபாஸ்டியன். தனது உறவினர் வீட்டில் தங்கிய செபாஸ்டியன், வெளியேபோய் விட்டு வருவதாக கூறி விட்டு மே 27ம் தேதி வெளியே போனார்.
நேராக தனது முன்னாள் காதலி இந்திராவின் கொட்டிவாக்கம் வீட்டுக்குப் போயுள்ளார் செபாஸ்டியன். அதற்குப் பிறகு அவர்என்னவானார் என்பது தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து செபாஸ்டியனின் மனைவி கேரள போலீஸில் புகார் கொடுத்தார். செபாஸ்டியன் சென்னையில் தங்கியிருந்தவீட்டின் உறவினரும் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அண்ணா சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந் நிலையில் திருவள்ளூர் அருகேதிருவாலங்காடு என்ற இடத்தில் செபாஸ்டியனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
செபாஸ்டியனை யார் கொலை செய்தது என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்இறுதியில் செபாஸ்டியனின் முன்னாள் காதலி இந்திரா, அவரது புதிய காதலன்களான ஆனந்த், சஞ்சய் என்ற சுந்தரேசன் மற்றும்முரளி, சதீஷ், அப்பு என்ற தீபன், ஆகியோர் பிடிபட்டனர்.
கல்யாணத்திற்குப் பிறகும் செபாஸ்டியனால் இந்திராவை மறக்க முடியவில்லை. எனவே, மனைவிக்குத் தெரியாமல்,இந்திராவுடன் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளார். அடிக்கடி சென்னைக்கு வந்து இந்திராவை பார்ப்பது வழக்கமாம்.
இந்ந நிலையில் இந்திராவுக்கும், ஆனந்த், சஞ்சய் ஆகிய இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதுசெபாஸ்டியனுக்குத் தெரிய வந்துள்ளது. இந்திராவை இதுதொடர்பாக அவர் கண்டித்துள்ளார்.
இதையடுத்து ஆனந்த், சஞ்சய் ஆகியோருடன் கலந்து பேசிய இந்திரா, செபாஸ்டியனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி 3 பேரும் மற்ற 3 பேரின் துணையுடன் செபாஸ்டியனைத் தீர்த்துக் கட்டி திருவள்ளூர் அருகேபிணத்தைத் தூக்கி எறிந்துள்ளனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலை செய்த குற்றத்திற்காக இந்த 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், கடத்தல் குற்றத்திற்காக தலா 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications