நாளை சென்னை வருகிறார் மன்மோகன் சிங்?
சென்னை:
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை சென்னைவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளத்தால் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மிகவும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது. 350க்கும் மேற்பட்டோர் இதுவரைஉயிரிழந்துள்ளனர்.வெள்ள சேத நிவாரணப் பணிகளுக்கு ரூ. 13,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்தியஅரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இதுவரை ரூ. 500 கோடி மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மட்டுமே இதுவரை மத்திய அரசிலிருந்துவந்து பார்த்துள்ளார். மத்தியக் குழுவும் வந்து பார்த்துள்ளது. ஆனால் பிரதமர் வந்து பார்க்காமல் இருந்தது பெரும் சர்ச்சையைஎழுப்பியுள்ளது.
இந் நிலையில் மன்மோகன் சிங் வெள்ள நிலைமையைப் பார்வையிடுவதற்காக சனிக்கிழமை காலை சென்னைக்கு வரவுள்ளதாகஒரு தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை சென்னை வரும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிடுகிறார்.
அதன் பிறகு கடலூர், நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களையும் அவர் பார்வையிடுவார் எனத் தெரிகிறது. இருப்பினும்தற்போது ஃபனூஸ் புயல் நாகை, சென்னை இடையே நாளை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பிரதமரின்பயணம் ஒத்திவைக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications