வெள்ளம்: வெள்ளை அறிக்கை கேட்கும் டெல்லி
டெல்லி:
தமிழத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதம் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத புயல் மழை காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளைஇழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள்சேதமடைந்துள்ளன.தமிழக வெள்ளச் சேதத்திற்கு மத்திய அரசு ரூ. 13,685 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதன் மீது தமிழக எம்பிகள் பேசுகையில் வெள்ளச் சேதங்களை சீர் செய்யவும் பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் தமிழக அரசுகேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர்சிவராஜ் பட்டீல் ஒரு அறிக்கை படித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள ரூ. 500 கோடி நிதியுதவி உடனடி நிவாரணமாகும். மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புக்கான தொகை அல்ல. உறுப்பினர்கள் இவை இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
தமிழக அரசு கேட்டு இருக்கும் ரூ. 13,685 கோடி பெரிய தொகை. இதை ஒரு கடிதம் அல்லது மனு அடிப்படையில் கொடுத்து விடமுடியாது. எவ்வளவு வீடுகள் கட்டப்பட வேண்டும், விவசாய நிலங்களில் எவ்வளவு பாதிப்பு, சாலைகளை மீண்டும்அமைப்பதற்கு ஆகும் செலவு ஆகியவை குறித்து அரசு வெள்ளை அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
நிதி அமைச்சர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருடன் நான் ஆலோசனை நடத்தி விரிவான அறிக்கையை அனுப்புமாறுதமிழக அரசுக்கு கடிதம் எழுதும்படி கேட்டுள்ளேன். மாநில அரசு அனுப்பும் திட்ட அறிக்கை மத்திய திட்டக் குழுவுக்கும் தேசியபேரழிவு நிர்வாக ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.
மேலும் மத்திய அரசு அனுப்பிய ரூ. 500 கோடி நிதி தமிழகத்துக்கு வந்து சேரவில்லை என்று உறுப்பினர்கள் கூறினார்கள். நிதிஅமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவர் அடுத்த நாளே நிதியை அனுப்பிவிட்டதாக கேள்விப்பட்டேன். இது பற்றி மீண்டும்அவரிடம் கேட்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications