சப்-இன்ஸ்பெக்டரால் கற்பழிக்கப்பட்ட பெண்
சென்னை:
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் கற்பழிக்கப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காந்தி நகரை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி தெக்கமலையின்மனைவி லட்சுமி, ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த தனது கணவனை வையம் பட்டி காவல்நிலையத்துக்கு பார்க்கச் சென்றார்.கணவனை பார்க்கச் சென்ற லட்சுமியை இந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துசென்று கற்பழித்தார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் பிடுங்கி கொண்டார்.
இது தொடர்பாக திருச்சி செசஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சப்-இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், தெக்கமலைக்கு ரூ. 50,000 மற்றும் லட்சுமிக்கு ரூ. 2 லட்சமும் நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றுதீர்ப்பளித்தது. ஆனால் இது வரை இந்தப் பணம் தமிழக அரசால் தரப்படவில்லை.
எனவே தெக்கமலையும், லட்சுமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், பாதுகாப்புவழங்குவதுடன் மறுவாழ்வுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரூ. 75,000இடைக்கால நிவாரணமாகவும், ரூ. 10,000 மறுவாழ்வுக்கும் வழங்கும்படி உத்தரவிட்டார்.
ஆனால் இந்த நிவாரண தொகை போதாது என்று பாதிக்கப்பட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்தமனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
போலீஸ் நிலையம் வந்த பெண் சட்ட விரோதமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். மறைமுகமான இந்த குற்றத்திற்கு அரசு தான் காரணம்.பொது ஊழியர்களாக இருப்பவர்களே இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டது அடிப்படை மனித உரிமை மீறலாகும். எனவேஇந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் நியாயமான அளவில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
இருவருக்கும் ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஏற்கனவே ரூ.75,000இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதால் ரூ. 4.15 லட்சத்தை 6 சதவிகித வட்டியுடன் 8 வாரத்தில் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இதனால் வட்டியுடன் ரூ. 5 லட்சத்திற்கு மேல் கிடைக்கும். எனவே ரூ. 5 லட்சத்தை லட்சுமி பெயரில் 3 ஆண்டுகளுக்கு வங்கியில்டெபாசிட் செய்ய வேண்டும். மீதி பணத்தை இருவரிடமும் ஒப்படைக்கலாம்.
மேலும் விவசாய நிலம் ஒன்றை ஆதிதிராவிடர் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் இவர்களுக்கு மலிவு விலையில் வழங்கவேண்டும்.இவர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு பணத்தை வேண்டுமென்றால் அரசு, சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூல் செய்யலாம்என்று தீர்ப்பு கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications