சிகாகோ: ரன்வேயை தாண்டி ஓடிய விமானம்- காரில் மோதில் சிறுவன் பலி
சிகாகோ:
அமெரிக்காவின் சிகாக்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ரன் வேயைத் தாண்டி ஓடி விமான நிலையத்தின் சுற்றுச்சுவரையும் உடைத்துக் கொண்டு சாலையில் சென்ற கார்கள் மீது மோதியது. அதில் ஒரு காரில் இருந்த 6 வயது சிறுவன்பலியானான்.
சிகாகோவில் பனி கொட்டி வருகிறது. இந் நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை (அமெரிக்க நேரப்படி நேற்றிரவு)பால்டிமோரில் இருந்து வந்த செளத் வெஸ்ட் ஏர்லைன்சின் போயிங் 757 விமானம் சிகாக்கோவில் தரையிறங்கியது.ரன் வே முழுவதும் பனி நிரம்பிய நிலையில் பலத்த காற்றும் வீசியது. அப்போது தரையிறங்கிய அந்த விமானத்தின் முன் பகுதி ரன்வேயில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து ரன் வேயில் வழுக்கிக் கொண்டு மிக வேகமாக ஓடிய அந்த விமானம்,ரன்வேயின் கடைசியில் இருந்த இரும்புத் தடுப்புச் சுவரையும் இடித்து உடைத்துக் கொண்டு சாலைக்கு வந்தது.
அப்போது அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் விமானத்தின் மீது மோதின. இதில் ஒரு கார் அப்பளமாகநொறுங்கியது. அதிலிருந்த 6 வயது சிறுவன் பலியானான். அதிலிருந்த மேலும் 2 குழந்தைகளும், அவர்களது தந்தையும்,தாயாரும் காயமடைந்தனர். இதில் தந்தையும் மேலும் ஒரு குழந்தையின் நிலைமையும் மோசமாக உள்ளது.
இன்னொரு காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர். விமானப் பயணிகள் 3 பேரும் லேசான காயமடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications