போலி எப்.ஐ.ஆர்: போலீஸ் காவலில் சங்கர்
சேலம்:
போலி எப்.ஐ.ஆர் அச்சடித்த விவகாரத்தில் சிக்கியுள்ள அச்சக அதிபர் சங்கரை போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் தீவிரவிசாரணை நடத்த சேலம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த கீர்த்தனா பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தை நடத்தி வரும் சங்கர், காவல்துறையினர் சிலரின் துணையோடு,போலியான எப்.ஐ.ஆர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஆவணங்களை அச்சடித்து அதை கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களுக்கு சப்ளை செய்துள்ளார்.இந்த போலி ஆவணங்கள் மூலம், போலீஸார் லட்சக்கணக்கில் காசு பார்த்துள்ளனர். சட்டவிரோதமாக நடந்த இந்த மோசடிதற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரை காவலில் எடுத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த சேலம் போலீஸார்முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுப்பதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் புதிய பூதம் ஒன்றும் கிளம்பியுள்ளது. பொதுவாக கார் அல்லது வாகனம் ஏதாவது விபத்திலோ, தீவிபத்திலோசேதமடைந்து போனால் அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தை அல்லது அதற்குப் பதில் புதிய வாகனத்தை வாங்க முடியும். இதற்குசம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து, முதல் தகவல் அறிக்கை நகலை வாங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தாக்கல் செய்யவேண்டும்.
சங்கரின் திருவிளையாடல் மூலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் போலியான எப்.ஐ.ஆர். நகலைப் பயன்படுத்திஏராளமானோர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சங்கர் விவகாரம் தற்போது வெளி வந்துள்ளதைத் தொடர்ந்து தங்களிடம் சேத நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட முதல்தகவல் அறிக்கை நகல்களை பரிசோதிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனவாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications