ஓகேனக்கல்லில் மீண்டும் கர்நாடகம் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

ஓகேனக்கல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 3 பரிசல்களை கர்நாடக வனத்துறையினர் அத்துமீறிகைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஓகனேக்கல் திகழ்கிறது. இந் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகவனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஓகனேக்கல் கர்நாடகத்திற்கே சொந்தம் என்று கூறி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

கன்னட வெறியர்கள் சிலரும் ஓகனேக்கல் தங்களுக்கே சொந்தம் என்று கூறி அங்கு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு மாநில அதிகாரிகளும் இணைந்து சர்வே நடத்தி சர்ச்சைக்குரிய பகுதி தமிழகத்திற்கே சொந்தம் என்று முடிவுசெய்யப்பட்டது.

இந் நிலையில் ஓகேனக்கல்லைச் சேர்ந்த ஆனந்தன், முனியப்பன், ஆறுமுகம் ஆகியோர் 20 சுற்றுலாப் பயணிகளை தங்களதுபரிசல்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

எல்லை அருவி அருகே பரிசல்கள் சென்றபோது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் 3 பரிசல்களையும் பறித்துக்கொண்டனர். 3 படகோட்டிகளையும் பிடித்தனர்.

இந்த இடம் கர்நாடகத்துக்குச் சொந்தமானது என்று கூறிய கர்நாடக வனத்துறையினர், சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவரிடமும்ரூ. 20 கேட்டனர். ஆனால், பரிசலில் வருவதற்கு ஏற்கனவே ரூ. 10 கொடுத்துவிட்டோம். இனி ஏதும் தர முடியாது என்று கூறினர்.

இகையடுத்து பரிசல்களைப் பறித்துக் கொண்ட கர்நாடக வனத்துறையினர், பயணிகளையும் படகோட்டிகளையும் தவிக்க விட்டுவேடிக்கை பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் வேறு ஏற்பாடுகள் செய்து மாற்றுப் படகை வரவழைத்து பயணிகளையும் ஏற்றிக் கொண்டுகரைக்குத் திரும்பினர்.

தமிழக பரிசல்களை கர்நாடகத்தினர் அத்துமீறிக் கைப்பற்றிய தகவல் பரவியதையடுத்து ஓகேனக்கல்லில் பெரும் பதற்றம்தொற்றிக் கொண்டது.

இந்த விவகாரத்தால் மீண்டும் ஓகேனக்கல் விவகாரம் பெரிதாகியுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எந்த நேரத்திலும்மோதல் வெடிக்கும் சூழல் நிலவுகிறது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் கர்நாடக வனத்துறையினருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.பறிமுதலான படகுகளை இன்று மாலைக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரச்சனை வெடிக்காமல் தடுக்க ஓகேனக்கல்லில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தினின் அத்துமீறலால் பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர். அருவிகளில்வெள்ளம் பாயும் நிலையில் அதைப் பார்க்க வரும் பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தவிருந்த ஓகேனக்கல் பகுதி மக்களின்வயிற்றில் அடித்துள்ளனர் கர்நாடக வனத்துறையினர்.

வீரப்பன் நடமாட்டம் இருந்தவரை இந்தப் பக்கம் கர்நாடக வனத்துறை எட்டிப் பார்ப்பதே அரிதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+