சன், ஜெயா டிவி பார்க்காதீங்க: விஜய்காந்த்
கும்மிடிப்பூண்டி:
இரண்டு கட்சியினர் (அதிமுக, திமுக) டிவிக்களை (ஜெயா, சன்) நடத்துகிறார்கள். அதில் ஒருவரை ஒருவர் குறை சொல்கிறார்கள்.அதனால் தயவு செய்து டிவியில் செய்தியை பார்க்காதீங்க. சினிமா நிகழ்ச்சி, நாடகம் பார்த்துட்டு டிவியை ஆப் செய்துவிடுங்கள்என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் கூறினார்.
கும்மிடிப்பூண்டியையொட்டி கிராமங்களில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே பேசுகையில்,நான் அரசியலை விட்டு ஒதுங்கிப் போனாலும். தெய்வம் ஒதுங்க விட மாட்டேங்குது. நீ மக்களிடையே போ என்றுதள்ளிவிட்டது. மதுரையில் மாநாடு நடத்தப் போகும்போது கூட என்னிடம் பணமில்லை.
அதை மனைவியிடம் கூறினேன். அவர் தான் தைரியமாக நிலத்தை விற்கச் சொன்னார். சரியென்று நிலத்தை விற்றேன். நான்எப்படி காலத்தை ஓட்டுகிறேன், எப்படி காலம் கடத்துகிறேன் என்று எனக்குத் தெரியாது.
ஆனால், எனது கல்யாண மண்டபத்தை இடிக்கனும் என சிலர் கற்பனை செய்துகிட்டு இருக்காங்க. இடித்தால் இடிக்கட்டும்.என்னை அரசியலுக்கு வர விடக் கூடாது, மக்களை சந்திக்க விடக் கூடாது என்று சிலர் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
என் சொத்து போனது குறித்தெல்லாம் எனக்குக் கவலையில்லை. என் மனைவி எனக்கு தெய்வம் மாதிரி. கணவனே கண்ட கண்டதெய்வம்னு சொல்றது தப்பு, மனைவியே கண் கண்ட தெய்வம்னு சொல்றது தான் கரெக்ட்.
இரண்டு தடவை யார், யாருக்கோ ஓட்டு போட்டுட்டு நீங்க எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. இந்த முறை எனக்கு வாய்ப்புகொடுங்கள். நான் பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை, உழைப்புக்காக வந்தேன்.
நான் ஜாதியை மதிக்கிறேன். மற்றபடி ஜாதி வேண்டாம். அதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று தான் சொல்கிறேன். ஜாதிஅரசியல் எனக்குப் பிடிக்காது. ஜாதி அரசியலை கொண்டு வந்தது யார் என்பதை அப்புறம் சொல்கிறேன்.
இரண்டு கட்சியினரும் டிவி நடத்துகிறார்கள். அதில் ஒருவரை ஒருவர் குறை சொல்கிறார்கள். அதனால் தயவு செய்து டிவியில்செய்தியை பார்க்காதீங்க. சினிமா நிகழ்ச்சி, நாடகம் பார்த்துட்டு டிவியை ஆப் செய்துவிடுங்கள்.
நான் டிவியில் செய்திகள் பார்த்து 2 மாதம் ஆகிறது. செய்திகளைப் பார்க்க வேண்டுமானால் பேப்பர் படியுங்கள் என்றார்விஜய்காந்த்.
கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய பல கட்டடங்கள் இடிபட உள்ளன. அதில் விஜய்காந்தின் கல்யாணமண்டபத்தின் படிக்கட்டு உள்பட சிறிய பகுதியையும் இடிக்கத் திட்டமிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலைத்துறை.
நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிப்பாதக் அடிக்குரலில் சினிமா வசனம் பேசும் விஜய்காந்த், சில சென்ட் நிலத்தை நாட்டுக்காகவிட்டுத் தர ரொம்பவே மனமொடிந்து போவது ஏனோ தெரியவில்லையே..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications