வந்தது சேலம்.. கேரளாவுக்கு கும்பிடு
சென்னை:
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உதயமாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்தியரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
இதன்மூலம் கேரளாவின் பாலக்காடு கோட்டத்தில் அடிமையாக இருந்த சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின்மேற்குப் பகுதி மாவட்டங்கள் சேலத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.இதனால் தமிழக ரயில்வேயின் ஒரு பகுதியை கேரளம் கட்டுப்படுத்தி வந்த நிலை மாறும். தமிழக ரயில்வே அதிகாரிகளின்விடுமுறையில் இருந்து சம்பளம் வரை அனைத்தும் பிராஸஸ் ஆவது கேரளத்தில் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையை மாற்ற சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று பலகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதவாறு கேரளம்பார்த்துக் கொண்டது.
இந் நிலையில் தற்போது பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு மத்திய ரயில்வே இணை அமைச்சராக உள்ள நிலையில், பாமகவின்தொடர் முயற்சியால் சேலம் ரயில்வே கோட்டம் உதயமாகியுள்ளது.
இது குறித்து லாலு பிரசாத் யாதவ் மக்களவையில் பேசுகையில், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்படுவதாகவும்,அதுதொடர்பான நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 50 ஆண்டு கோலகோரிக்கையான சேலம் ரயில்வே கோட்டம் தற்போது உதயமாகியுள்ளது.
சேலம் மற்றும் சேலத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் இதுவரை கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன்இணைந்திருந்தன. தற்போது இவை அனைத்தும் சேலம் கோட்டத்தின் கீழ் வரும். இதனால் நிர்வாகரீதியாக இப்பகுதிமக்களுக்குப் பெரும் பலன் கிடைக்கும்.
பாமகவின் அயராத முயற்சியால் இந்த கனவு நினவாகியுள்ளது. முன்பு ஏ.கே.மூர்த்தி ரயில்வே அமைச்சராக இருந்தபோதும்,தற்போது ஆர்.வேலுவின் முயற்சியாலும் இந்தக் கனவு விரைவில் நனவாகியுள்ளது.
பாமகவின் இந்த முயற்சிக்கு வலிமை சேர்த்த திமுக தலைவர் கருணாநதி மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு எனது நன்றிகள் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.
புதிதாக உருவாக்கப்படும் ரயில்வே கோட்டத்தில் சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்குப் பகுதி மாவட்டங்கள் இணையும்.இவை அனைத்தும் தற்போது கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்துடன் இணைந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications