அமெரிக்காவில் குவியும் வெளிநாட்டினர்
ஹூஸ்டன்:
பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து மிகவேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 80 லட்சம் பேர் குடியேறியுள்ளனர். இதில் பாதி பேர் சட்ட விரோதமாகக்குடியேறியவர்கள் ஆவர் என அந் நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியம் அறிவித்துள்ளது.2000 ஆண்டு முதல் 35.2 மில்லியன் வெளிநாட்டவர்கள் (சுமார் 3.5 கோடி பேர்) அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். இதில் 80லட்சம் பேர் அங்கேயே குடியேறிவிட்டனர். 1910ம் ஆண்டுக்குப் பின் கடந்த மார்ச் மாதத்தில் தான் மிக அதிகமானவர்கள் ஒரேமாதத்தில் அமெரிக்காவுக்குள் புகுந்துள்ளனர்.
1970களில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியோரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 4.7சதவீதமாக இருந்தது. இப்போது அது 12.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 11 நியூயார்க் விமான தாக்குதல்களுக்குப் பின் குடியேற்ற விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்ட போதிலும்அமெரிக்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை. மாறாக அதிகரித்துள்ளது.
இப்போது குடியேறி வரும் வெளிநாட்டினரில் 31 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டாதவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனால் கீழ் மட்டத்தில் உள்ள தொழில்களில் வேலைக்கு போட்டி மிகவும் அதிகரித்து கல்வியறிவு அதிகமில்லாதஅமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போது அமெரிக்காவில் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் மாகாணங்களின் விவரம்:
கலிபோர்னியா
டெஸ்காஸ்
ஜார்ஜியா
நியூ ஜெர்சி,
மேரிலேண்ட்
நார்த் கரோலினா
வாஷிங்டன்
பென்சில்வேனியா
விரிஜினியா
அரிசோனா
டென்னசி
மின்னசோட்டா
நெபாடா
நியூ மெக்சிகோ
செளத் கரோலினா
மிசிசிப்பி ஆகியவை
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications