புரளியால் பலியான 42 உயிர்கள்
சென்னை:
மழை, வெள்ள நிவாரணம் இன்றோடு (ஞாயிற்றுக்கிழமை) கடைசி என்று சிலர் புரளி பரப்பியதாலும், கன மழையால் நனையமுடியாததாலும், முண்டியடித்துப் போய், நெரிசலில் சிக்கி 42 பேருடைய உயிர்கள் பறிபோயுள்ளன.
சென்னை வியாசர்பாடியில் கடந்த மாதம் வெள்ள நிவாரண நிதிப் பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மத்தியில் திடீரென நெரிசல்ஏற்பட்டதால் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தைப் போலவே, ஆனால் இதை விட மிகக் கொடுமையான சம்பவம்எம்.ஜி.ஆர் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரங்கேறியுள்ளது.வியாசர்பாடி சம்பவத்தைப் போலவே இந்த சம்பவத்திலும் சிலர் கிளப்பிய புரளி தான் இத்தனை உயிர்கள் பறி போகக் காரணமாகஅமைந்துள்ளது. இந்த கோரச் சம்பவம் குறித்து காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலர்கூறியதாவது:
கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்டோர் சம்பவம் நடந்த மாநகராட்சிப் பள்ளிக்கு வெளியே சனிக்கிழமை இரவே கூடி விட்டோம்.அனைவரும் வரிசையாக நின்றிருந்தாம். கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை தான் கடைசிநாள்,அதற்குப் பிறகு நிவாரண உதவிகள் வழங்கப்படாது என்று சிலர் அப்போது கூறி வந்தனர். இதனால் கூட்டத்தினர் மத்தியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் கன மழையும் பெய்யத் தொடங்கியது. இதனால் நின்றிருந்த கூட்டத்தினர் மத்தியில் டென்ஷன் அதிகரித்தது.அவர்கள் உடனடியாக கேட்டைத் திறந்து விடுமாறு கூறி கோஷமிட்டனர். இந்த சமயத்தில் பள்ளிக்கூட கேட் திறந்துவிடப்பட்டதால் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர்விழுந்தனர்.
கீழே விழுந்த சிலர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பினோம். அவர்கள் அனைவரும் எங்களுக்குப் பின்னால் ஓடிவந்தவர்களைத் தடுக்கும் விதமாக மண்ணை எடுத்து அவர்கள் மீது வீசினோம்.
இதனால் அவர்கள் நின்று விட்டார்கள். இல்லையென்றால் அதிக அளவில் உயிர்ப்பலி ஆகியிருக்கும் என்று அவர்கள்தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 34 பேரின் உடல்கள் அடையாளம்காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாதஅளவுக்கு முகம் சிதைந்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications