நெரிசல் பலி: கலாம், நாடாளுமன்றம் இரங்கல்
டெல்லி:
![]() |
| மைதானத்தில் உயிர் பிழைக்க ஓடியவர்களின் காலடித் தடங்கள் |
சென்னையில் வெள்ள நிவாரண கூட்ட நெரிசல் சிக்கி 42 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும்தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
கலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை வெள்ள நிவாரண கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை மாநில அரசுவழங்கும் என நம்புகிறேன்,
இச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
![]() |
| அழுது.. அழுது |
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங்பர்னாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறிஞர் அண்ணா மாநகராட்சி உயர் நிலைப் பள்ளியில் நடந்த எதிர்பாராத சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர்இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலை கேள்விப்பட்டதும் ஆழ்ந்த அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும்அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் அஞ்சலி:
இந்தத் துயரச் சம்பவத்துக்கு லோக்சபாவிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கு நாடாளுமன்றத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.
நீதிபதி ராமன் விசாரணை கமிஷன்:
![]() |
| அரசு மருத்துவமனையில் கிடக்கும் பிணங்கள் |
இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராமன் விசாரணைநடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய இச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.தற்போது விசாரணைக் கமிஷன் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆ.ராமன் விசாரணை கமிஷன் தலைவராக செயல்படுவார் என அரசு அறிவித்துள்ளது.
சம்பவம் நடக்கக் காரணமாக இருந்த சூழ்நிலைகள், காலை 9 மணிக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தும் முன்கூட்டியேவழங்கப்படும் என வதந்தி பரப்பப்பட்டது, பாதுகாப்பு ஏற்பாடுகள், டோக்கன் வழங்கியதில் குறைபாடுகள் இருந்ததா,வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசாரணைக்கமிஷன் ஆராயும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியே போலீசாரின் கையாளாகத்தனத்தையும் விசாரித்தால் நல்லது.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications