அதிகாரிகளை தண்டிக்க வீரமணி, திருமா கோரிக்கை
சென்னை:
எம்.ஜி.ஆர் நகர் சம்பவத்திற்குக் காரணமான, உண்மையான குற்றவாளிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று திராவிடகழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இத்தனை ஆயிரம் மக்களை, அதுவும் சென்னையில் விட்டு விட்டு கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஒரேகட்டடத்தில் கூடி விட விட்டிருக்கலாமா அதிகாரிகள்? காவல்துறையினர் தக்க பாதுகாப்புடன் செயல்பட்டிருந்தால் இதைதவிர்த்திருக்கலாம்.
அரசு அதிகாரிகள் வீடுகளுக்கே நேரில் சென்று அந்த உதவிகளை அளித்திருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காதே.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதலில் நடவடிக்கை எடுப்பதே சரியான செயலாக இருக்க முடியும்.
நீதி விசாரணைகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டதாக வரலாறே கிடையாது. எனவே பொருந்தாத காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதை விட இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் வகையில், உண்மையமானகுற்றவாளிகளைக் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
உண்மை கண்டறியும் குழு: திருமா
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 42 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்படும் எனவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 20 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். 3 ரேஷன் கடைகளில் உள்ள கார்டுகளுக்கு ஒரே இடத்தில்டோக்கன் வழங்கியுள்ளனர்.
இது மிகப் பெரும் தவறு. இதன் காரணமாகவே இத்தனை உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் 6,000 பேருக்கு ஒரு ரேஷன் கடைதான் உள்ளது. இதுவும் ஒரு மிகப் பெரிய குளறுபடியாகும். 500கார்டுகளுக்கு ஒரு கடை என்று இருக்க வேண்டும்.
எனவே கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக உண்மைகண்டறியும் குழுவை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications