ரூ.3.87 கோடியில் அரசு சாதனை விளம்பரம்!
சென்னை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக அரசுக்கு கண்டனம்தெரிவித்து திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது.இதில் கருணாநிதி பேசுகையில், அதிமுக அரசைக் குற்றம் சாட்டிப் பேச நான் இங்கே வரவில்லை. மக்களிடம் ஒரே ஒருகோரிக்கையை மட்டும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக வைக்கிறேன். வருகிற தேர்தலில் சரியான பாடம் கற்பியுங்கள், எம்.ஜி.ஆர்.நகர் மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள்.
எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்திற்குப் பின்னும் கூட அரசு சரியான பாடம் கற்றுக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் மீது அவதூறுகூறுவதும், பழி சுமத்துவதுமாக இருக்கிறது. இந்த அரசு திருந்தாது.
மாநில அரசுடன் நாங்கள் ஒத்துழைக்கத் தயாராகவே இருக்கிறோம். இந்த அசம்பாவிதச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள்தான்காரணம் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுமானால், அதற்கு மக்கள் கொடுக்கும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக் கொள்ளநாங்கள் தயார்.
அனைத்துக் கட்சிக் குழுக்களை அமையுங்கள் என்று நாங்கள் சுனாமி தாக்கிய நாளிலிருந்து கூறி வருகிறோம். ஆனால், அதில்அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்பது புரியவில்லை. நிதியை சரியாக செலவழியுங்கள் என்று கூறினால் இந்த அரசுக்குக்கோபம் வருகிறது.
ஆனால், ரூ. 3.87 கோடி செலவு செய்து, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில், தனதுஅரசின் சாதனைகளை பறை சாற்றி விளம்பரம் செய்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளது அதிமுக அரசு.
அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசிமுடிவெடுக்கப்படும் என்றார் கருணாநிதி.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டோரும் பேசினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications