மின்துறை அமைச்சருக்கே பவர் கட்

Subscribe to Oneindia Tamil

நத்தம்:

நத்தத்தில் மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்ட விழாவில் மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் அவர்பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.

நத்தத்தில் நபார்டு வங்கி உதவியுடன் சந்தை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8.97 லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது.நத்தம் பஸ் நிலையம் அருகே மதுரை சாலையில் ஒன்றிய நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் ஒரு வணிக வளாகம் கட்டப்பட்டது.

இந்த 2 வணிக வளாகங்களின் திறப்பு விழா நிகழ்ச்சியில் மின்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆர்.விஸ்வநாதன் கலந்துகொள்ள இரவு 7 மணிக்கு வந்தார். அப்போது திடீர் மின் தடை ஏற்பட்டதால் அவர் மேடைக்கு வராமல் சட்டமன்ற உறுப்பினர்அலுவலகத்திற்கு சென்றார்.

இதனால் அதிகாரிகள் எல்லாரும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று அமைச்சரை வரவேற்க ஓடினர். ஆனால் மின்தடை காரணமாக தான் காத்தாம்பட்டி சென்று வருவதாக கூறி அமைச்சர் சென்று விட்டார் .பிறகு 9 மணியளவில் திரும்பி வந்தஅமைச்சர் வணிக வளாகத்தை திறக்க சென்ற போது மீண்டும் மின்சாரம் தடைபட்டது.

இதனால் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் வணிக வளாகத்தை அமைச்சர் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+