வேளாங்கண்ணியில் களையிழந்த கிறிஸ்துமஸ்

Subscribe to Oneindia Tamil

வேளாங்கண்ணி:

Velankanni
இன்று வெறிச்சோடிக் கிடந்த வேளாங்கண்ணி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன்கொண்டாடப்படவில்லை.

கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் சிக்கி உருக்குலைந்த ஊர்களில் வேளாங்கண்ணியும் ஒன்று. கிறிஸ்துமஸ்திருவிழாவுக்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் சுனாமி அலைக்குப் பலியாயினர்.

வேளாங்கண்ணி நகரம் கடல் அலைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

இந்தத் துயரச் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. இந் நிலையில், வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் திருவிழாவழக்கமான உற்சாகம் இன்றி பெயரளவுக்கே கொண்டாடப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்த துயரச் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேளாங்கண்ணி ஆரோக்கியஅன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

கடற்கரை மணல் வெளியில் ஏராளமானோர் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களிலும் கிறிஸ்துமஸ் திருவிழா வழக்கமான உற்சாகம் இல்லாமல்கொண்டாடப்பட்டது. பல பேராலயங்களில், சுனாமியில் இறந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+