பெங்களூரில் 6 மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்
பெங்களூர்:
புத்தாண்டையொட்டி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம், அதையொட்டியுள்ள 5 நட்சத்திர ஹோட்டலான அசோகாஆகியவற்றில் ஆறு பேர் கொண்ட தற்கொலைப் படையினர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக கர்நாடகமுதல்வருக்கும் பெங்களூர் போலீஸ் கமிஷ்னருக்கும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்கும் பேக்ஸ் மிரட்டல் வந்துள்ளது.
அல்-ஜிகாதீஸ் என்ற அமைப்பின் மொய்னுதீன் என்பவரின் பெயரில் இந்தக் கடிதம் பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,முதல்வரின் இல்லத்தில் மட்டும் 3 குண்டுகள் வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.முதலில் ஹோட்டலிலும் பின்னர் முதல்வரின் இல்லமான அனுகிரகாவிலும் தாக்குதல் நடக்கும் என்றும், இந்தத் தாக்குதல் மிகக்கச்சிதமாக நடத்தப்படும் என்றும், முடிந்தால் அதை போலீசார் தடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பேக்ஸ் கடிதம் வந்ததை ஒப்புக் கொண்டுள்ள பெங்களூர் நகர இணை கமிஷ்னர் நாராயண கெளடா, முதல்வருக்கும்முதல்வர் இல்லத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய கர்நாடக டிஐஜி சியால், முதல்வரின் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.அவரை சந்திக்க யார் வந்தாலும், அமைச்சர்களாகவே இருந்தாலும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவர் என்றார்.
அதே போல ஹோட்டல் அசோகாவுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெங்களூர் ஐஐஎஸ் வளாகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி பயன்படுத்திய ஏகே-56 ரக துப்பாக்கி சீனாவில்தயாரானது என்று தெரியவந்துள்ளது. இந்தத் தூப்பாக்கி தவிர ஒரு ரிவால்வர் மூலமும் அவன் சுட்டுள்ளான்.
இந் நிலையில் நேற்றும் இன்றும் பெங்களூரில் பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு தொடர்ந்துவெடிகுண்டு மிரட்டல் தொலைபேசிகள் வந்தவண்ணம் உள்ளன.
நேற்று கன்வர்ஜிஸ் சாப்ட்வேர் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந் நிலையில் இன்று ஒசூர்ரோட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால், இங்கெல்லாம் நடத்தப்பட்ட சோதனைகளில்குண்டு ஏதும் சிக்கவில்லை.
இதற்கிடையே ஐஐஎஸ்சில் நடந்த தீவிரவாதியின் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தந்த சாட்சியத்தின் அடிப்படையில் அந்தத்தீவிரவாதியின் கம்ப்யூட்டர் படத்தை போலீசார் தயாரித்துள்ளனர். அந்தப் படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications