பெங்களூர் பயங்கரம்: கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை பிடிக்க வேட்டை
சென்னை:
பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமறைவாக இருக்கும், கோவை குண்டுவெடிப்புச்சம்பவத்தில் தொடர்புடைய 12 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை நகரில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரைச் சுற்றிலும்,நகருக்குள்ளும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிதாக 16 செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டு வாகனப் பரிசோதனைநடக்கிறது.இரவு பகலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விடுதிகளிலும் போலீஸால் சல்லடை போட்டு சோதனை டத்தி வருகின்றனர்.
இந் நிலையில், இந்த நேரத்தில் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள கோவை குண்டுவெடிப்புக் கைதிகள் 12 பேரால் எந்தவிதஅசம்பாவிதமும் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக அவர்களைத் தேடும் பணியை போலீஸார் மீண்டும் முடுக்கி விட்டுள்ளனர்.
கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு இவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
கோவையைச் சேர்ந்த அயூப், டெய்லர் ராஜா, முஜிபுர் ரஹ்மான், நெல்லையைச் சேர்ந்த ரசூல் மைதீன், வாணியம்பாடியைச் சேர்ந்தமுஷ்தாக் அகமது, நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்,
கேரளாவைச் சேர்ந்த நுகு, குஞ்சு முகம்மது, ஹைதராபாதைச் சேர்ந்த அபு ஹம்சா, பாகிஸ்தானைச் சேர்ந்த அபு உமர் மற்றும்அடையாளம் தெரியாத மேலும் 2 பேர் உள்பட 12 பேர் குறித்த அனைத்து விவரங்களும், புகைப்படங்களும் தமிழகம் முழுவதும்உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் இறங்கியுள்ளனர். இவர்களில் அபு உமர், அபு ஹம்சா ஆகியஇருவரும் தற்போது சவூதி அரேபியாவில் இருப்பதாகவும் ஒரு தகவல் போலீஸாரிடம் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications