தரம்சிங்குக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக முதல்வர் தரம்சிங்கின் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன வளாகத்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீதுதீவிரவாதி ஒருவன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.

இதில், விஞ்ஞானி பூரி பலியானார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதியைபோலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதலினால் ஏற்பட்ட பீதி அடங்குவதற்குள் கடந்த 30ம் தேதி பெங்களூரில் உள்ள பெரும்பாலான பத்திரிகைஅலுவலகங்களுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தில் புத்தாண்டு தினத்தன்று கர்நாடக முதல்வர் தரம் சிங்கின் வீடு மற்றும்கிராண்ட் அசோகா ஓட்டல் ஆகியவை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதையடுத்து முதல்வரின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந் நிலையில், தரம்சிங்குக்கு நேற்று மீண்டும் ஒருவெடிகுண்டு மிரட்டல் வந்தது. போன் மூலம் அவரது வீட்டைத் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவன் தரம்சிங்கின்வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளான்.

குல்பர்கா மாவட்டத்தில் உள்ள தரம் சிங்கின் சொந்த ஊரில் இருந்தே மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான்.

விபத்தில் முதல்வரின் காவலர்கள் காயம்:

இதற்கிடையே முதலமைச்சர் தரம்சிங்கின் பாதுகாப்புக்காக ஹாசன் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த கார்விபத்துக்குள்ளானது. இதில் அவரது பாதுகாவலர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலகோலா என்ற இடத்தில் கோமதீசுவரர் சிலைக்கு அடுத்த மாதம் நடக்கவுள்ளமகாமஸ்தகாபிஷேக விழா ஏற்பாடுகளை பார்வையிட முதலமைச்சர் தரம்சிங் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்இன்று புறப்பட்டு சென்றனர்.

அப்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்புக்கு அவர்களின் வாகனத்தை பின் தொடர்ந்து பாதுகாப்புபோலீசாரும் காரில் சென்றனர். தரம்சிங்கின் பாதுகாப்புக்காக சென்ற கார் மினி லாரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட காரில் இருந்த பாதுகாப்பு போலீஸ் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த 2பேரும் உடனடியாக சென்னராயபட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+