For Daily Alerts
போலி வாக்காளர்: அமைச்சருக்கு சம்மன்
விழுப்புரம்:
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலி வாக்காளர்களை சேர்த்தது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பரிசீலித்த நீதிபதி முருகன், அதை விசாரணைக்கு ஏற்றார்.
இதையடுத்து வருகிற பிப்ரவரி மாதம் 3ம் தேதி சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்என்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக சம்மனும் பிறப்பிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் சுமார் 13 லட்சம் போலி வாக்காளர்களை கத்தை கத்தையாக சேர்த்த விவகாரத்தில் முதன் முதலாக கோர்ட்டுக்குஇழுக்கப்படும் அமைச்சர் என்ற பெருமையை கல்வியமைச்சராக உள்ள மாண்புமிகு சி.வி.சண்முகம் அவர்கள் இதன் மூலம்பெறுகிறார்.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |