81 நாட்களுக்கு பின் குறைந்த மேட்டூர் நீர்மட்டம்
மேட்டூர்:
தொடர்ந்து 81 நாட்களாக முழுக் கொள்ளளவில் இருந்து வந்த மேட்டூர் நீர்மட்டம் தற்போது ஐந்து அடி குறைந்துள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்திற்கு கடந்த ஆண்டு அபரிமிதமான நீர்வரத்து இருந்தது. தொடர்ந்துபெய்த கன மழை காரணமாகவும், கர்நாடகத்திலிருந்து தொடர்ந்து வந்த நல்ல நீர் வரத்து காரணமாகவும் அணை மொத்தம் 4முறை நிரம்பியது. இது ரெக்கார்ட் பிரேக் ஆகும்.
இதுமட்டுமின்றி தொடர்ந்து 81 நாட்கள் முழுக் கொள்ளளவான 120 அடியில் நீர்மட்டம் இருந்து புதிய சாதனையையும் மேட்டூர்படைத்தது. இந் நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு தொடர்ந்து நீர் திறந்துவிடப்படுவதாலும், அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 115.44 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4628 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து சுமார் 10,000 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications