சேலத்தில் 6 மாணவிகள், 5 மாணவர்களை காணவில்லை!- டியூசனுக்குப் போனவர்கள் மாயம்!
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 6 மாணவிகள் உள்பட 11 மாணவர்களை காணவில்லை.
இதனால் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 20 மாணவ, மாணவியர் அதே பகுதியைச் சேர்ந்த கீதா என்ற ஆசிரியையிடம டியூஷன் படித்துவந்தனர். திங்கள்கிழமை மாலை வழக்கம் போல இவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் டியூஷன் செல்வதாக கூறிச்சென்றனர்.
அவர்களில் 6 மாணவிகள் உள்பட 11 பேர் மட்டும் இரவு வீடு திரும்பவில்லை. வழக்கமான நேரத்தைத் தாண்டியும் பிள்ளைகள்வராததால் குழப்பமடைந்த பெற்றோர், ஆசிரியை கீதாவின் வீட்டிற்குச் சென்று கேட்டுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட 11 பேரும்அன்று டியூஷனுக்கே வரவில்லை என்று ஆசிரியை தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் உடனடியாகவிசாரணையில் இறங்கினர்.11 மாணவ, மாணவியரையும் தேடி சேலம் மாநகர் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல்வேட்டையில் இறங்கினர். ஆனால் அவர்கள் குறித்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகம் எங்கும் உள்ள காவல் நிலையங்களுக்கும் அவசர தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
11 மாணவ, மாணவியரையும் தேடும் பணிக்காக பல தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியர் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கவேண்டும் அல்லது சுற்றுலாவாக எங்காவது சென்றிருக்க வேண்டும் அல்லது சினிமா நடிகர்களைப் பார்க்கும் ஆசையில்சென்னைக்குச் சென்றிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
மாணவ, மாணவியர்களை யாராவது கடத்தியிருக்கலாமோ என்ற கோணத்திலும் சேலம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பிள்ளைகளைக் காணாத சோகத்தில் 11 பேரின் பெற்றோர்களும் காவல் நிலையம் முன்பாக அழுத கண்களுடன்கூடியுள்ளனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவ, மாணவியர் குறித்து ரயில்வே போலீசாருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ரயிலில் இருந்து வந்திறங்கும்மாணவ, மாணவிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டாண்டுகளிலும் கண்காணிப்புபோடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications