பெங்களூர் கொண்டு செல்லப்பட்ட பஷீர்
சென்னை:
பெங்களூர் ஐஐஎஸ்சியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக சென்னையில் பிடிபட்ட முகம்மது பஷீர் என்ற நபர்பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக அவரை பெங்களூர் கொண்டு செல்வது தொடர்பாக சென்னை மற்றும் பெங்களூர் போலீஸாருக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.இத் தாக்குதல் தொடர்பாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மானிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில்பெங்களூரிலிருந்து தனிப்படை போலீஸார் சென்னைக்கு வந்தனர்.
சென்னை மண்ணடியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த முகம்மது பஷீர் என்பவரை அவர்கள் பிடித்தனர்.நேற்று இரவு முழுவதும் அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
அதில் பஷீர், திருக்குரான் புத்தகங்கள் விற்பவர் என்றும் புத்தக விற்பனைக்காகவே அவர் சென்னைக்கு வந்துள்ளார். என்றும்அவரிடம் அப்துல் ரஹ்மான் பலமுறை செல்போன் மூலம் பேசியுள்ளதும் தெரியவந்தது.
ஆனாலும், அவரிடம் நடத்தப்பட்ட மாரத்தான் விசாரணையில் அவருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை எனத் தெரிய வந்தது. மேலும், அப்துல் ரஹ்மானிடம் இவர் குரான் புத்தக விற்பனை தொடர்பாக மட்டுமே பேசியதும்தெரிய வந்தது.
இருப்பினும் பஷீரை பெங்களூருக்குக் கொண்டு செல்ல பெங்களூர் போலீஸார் முடிவு செய்தனர். ஆனால் சென்னை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய பிறகே அவரை சென்னையிலிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று சென்னை போலீசார் தெரிவித்தனர்.
கோர்ட்டில் ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றால் அவருக்கு எதிராக ஏதாவது ஆதாரத்தை போலீஸார் காட்டியாகவேண்டும்.
பஷீருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாதாதல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் பெங்களூர் போலீசாருக்கு சிக்கல்ஏற்பட்டது. எனவே அவரை அப்படியே அழைத்துச் செல்கிறோம் என பெங்களூர் போலீஸார் கூறினர்.
இதை சென்னை போலீஸார் ஏற்கவில்லை. இதையடுத்து இன்றும் பஷீரை தொடர்ந்து சென்னையில் வைத்தே பெங்களூர்போலீஸார் விசாரித்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து பஷீரிடம் இன்று விசாரணை நடந்தது. இன்றைய விசாரணையில் தமிழகஉளவுப்பிரிவு ஐ.ஜி. சஞ்சீவ் குமாரும் கலந்து கொண்டார்.
விசாரணையின் இறுதியில், பஷீரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டி இருப்பதாகவும் அவரை பெங்களூர்கொண்டு செல்வதாகவும் பெங்களூர் போலீஸார் கூறினர்.
இது தொடர்பாக பெங்களூர் போலீஸ் குழு தமிழக உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னாவுடனும் ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து பஷீரை பெங்களூர் கொண்டு செல்ல தமிழக போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து இன்று பிற்பகலில் பஷீர்பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications