சென்னை துறைமுகத்தில் நுழைந்த மர்மப் படகு!
சென்னை:
சென்னை துறைமுக எல்லைக்குள் நுழைந்த மர்மப் படகு மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துறைமுக எல்லைக்குள் மீனவர்கள் உள்ளிட்ட யாரும் நுழையத் தடை உள்ளது. துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களில் திருட்டுபோவதை தடுக்கவும் துறைமுகப் பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.துறைமுகத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சரக்குக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் ஒரு மர்மப் படகு நுழைந்தது.இதையடுத்து படகை நிறுத்துமாறு படையினர் உத்தரவிட்டனர்.
ஆனால் அதிலிருந்தவர்கள் அதை சட்டை செய்யாமல் வேகமாக சென்றார்கள். இதையடுத்து பாதுகாப்புப் படையினர்துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து அந்தப் படகு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டது. கப்பல்களில் இருந்து சரக்குகளைத் திருட இக் கும்பல்வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து துறைமுகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications